பேரன்புக்குரிய இளவேனில் வாசகர்களே! உங்கள் வாசிப்பு அனுபவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவற்றை வாசிக்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகர் அனுபவப் பகிர்வுகளுக்கு பரிசில்களும் காத்திருக்கின்றன. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். இளவேனிலின் ஆக்கங்களை ஆர்வத்தோடு வாசியுங்கள். அவை உங்களுக்குக் கொடுக்கும் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் வெற்றியாளர்களுக்கு பொங்கல் வெளியீட்டில் பரிசில்கள் வழங்கப்படும்.
மானுடராய்க் கூர்ப்படைந்த உயிர்கட்கெல்லாம் மனதுக்குள் மந்திக் குணம் மாறாதுண்டு கடல் தாண்டித் தொலைதூரம் வந்தால் கூட அதைக் கவனமாகக் காவுகிறார் காலந்தோறும் போகின்ற இடம்தன்னை புரிந்திடாமல் போகின்ற நோக்கமதும் புலப் படாமல் பேய் என்ன செய்வதென்றும் முடிவில்லாமல் புகுவார் பின் புகுவதையே தொழிலாய்ச் செய்வார் நிலைகொள்ளா மனதோடு நிதமும் வாடி நடைபோடும் வழி எழிலை நயந்திடாமல் நாளைக்கு என்ன என்றே நடுக்கமுற்று நற்கணங்கள் நாள்தோறும் தொலைக்கின்றாரே தமக்கென்ன வேண்டுமென்ற முடிவை […]
எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் […]
கண்ணாடி முன் நின்று சேலை மடிப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொண்டேன். ச்ச…இந்த வயிறு மட்டும் இல்லைனா இன்னும் நல்லா இருக்கும். எரிச்சலாக வந்தது. என்ன பண்ணாலும் இது மட்டும் குறைய மாட்டேங்குது. எப்ப சேலை கட்டினாலும் வயிற்றை கரித்துக்கொட்டுவதையும் சேலை மடிப்புகள் உள்வாங்கி மறைத்துக்கொள்ளும். இப்படி, சேலை கட்டும் ஒரு நாளில் எனக்கே என் வயிற்றின் மீது கரிசனம் உண்டானது. ஏன் எப்பவும் இப்படி திட்டிக்கொண்டே இருக்கேன். […]
என் வாழ்வில், மூன்று பாரிய இடம்பெயர்வுகளும் மறக்க முடியாதவை. இம் மூன்றும் ஒன்றுக்கொன்று, அவைக்கான தூண்டுதல் காரணிகளால் வேறுபட்டிருப்பினும் நோக்கம் ஒன்றாய்த்தான் இருந்தன- விடிவிற்காய்! இலங்கையில் நடந்த இரு இடம்பெயர்வுகளிலும் கூடவே அம்மா,அப்பா, தங்கை, அத்தான், மச்சாள் என பலரும் இருந்திருந்தனர். நடைபயணங்களில் பிஞ்சுக் கால்கள் வலித்த பொழுதுகளில் நடை வேகம் குறைந்தது. கூட்டத்தைப் பிரிந்து நடந்த பொழுதுகளில் அருகே ஒரு நாய்க்குட்டி பயணத் துணையானது. இம் மூன்றாவது இடம்பெயர்வுக்கு […]
முன்னைய பக்கத்தில் வெளியாகியிருக்கும் கதையை எழுதிய ஆயிஷா ரகுமான் யார் என்ற குழப்பம் இளவேனில் வாசகர்களுக்கு எழக்கூடும். மேற் சொன்ன “Bridging Shores” என்ற கதையையும் அதை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘ஆயிஷா ரகுமான்’ என்ற எழுத்தாளரின் பெயரும் ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செயலியின் புனைவு என்று சொன்னால் நம்பமுடியாது அல்லவா? இக்கதையை எழுதியது ChatGPT என்ற, இன்றைக்கு உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிதான். […]
Malar’s eyes welled up with tears as she stood at the edge of the Yarra River in Melbourne. The sun was setting, painting the sky in hues of orange and pink, but her thoughts travelled back to her hometown of Batticaloa, Sri Lanka. It had been years since she left […]
முழக்கம் பெரு முழக்கம் பேரழிவுக்கான அறிகுறி போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது. யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே மூள வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய குருதி ஆறாகப் பெருக்கெடுத்து வானத்தையே கடுஞ் சிவப்பாக மாற்றியது. அரசியல் மற்றும் சுயநலக் காரணங்களினால் தொடங்கி அப்பாவி மக்களின் உயிரைப் பணயமாக்கி நியாயத்திற்காகவே என்று காரணம் காட்டி அகிலத்தில் நடக்கும் பேரழிவு இந்தப் போர். அனுபவமே சிறந்த […]
நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன். வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான […]
Casey Tamil Manram Inc. (CTM) is a highly regarded Australian Tamil community organization that stands as a testament to the remarkable journey it embarked upon. Founded in December 2010 by a group of passionate Tamil Australians residing in the City of Casey, Victoria, CTM was driven by a profound vision to elevate and promote the rich tapestry of Tamil language, culture, and community welfare. It was born out of a pressing need for an entity to integrate and lead activities that foster the harmonious integration and welfare of the Tamil community in the City of Casey, which had become home to a significant number of Tamils from Ceylon and India. Today, CTM operates across the state of Victoria and is widely recognized for its myriad accomplishments, far-reaching influence, and national impact. With a rich legacy of success, CTM has become synonymous with excellence, making significant difference in the Tamil community and beyond.