இளவேனில் அவுஸ்திரேலியாவிலிருந்து வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழாகும். இதில் அவுஸ்திரேலியத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரதானமாக உரையாடப்படும். அவுஸ்திரேலிய வாழ்வுக்கான தனித்தன்மைகளை இனம் காண்பதும், அவற்றைப் பேசுவதும் அதனூடாக பரந்துபட்ட தமிழ் அல்லது மனிதச் சமூகத்தில் நம்முடைய இடம்பற்றியதுமான தேடலை இச்சஞ்சிகை தன்னளவின் முன்னெடுக்கிறது. தமிழில் ஆழமான உரையாடல்களை செய்யமுடியாத ஆனால் தமிழர் வாழ்வோடு தம்மை நெருக்கமாக ஈடுபடுத்தியிருக்கும் குழுவோடான உரையாடல்களுக்காக இச்சஞ்சிகை தமிழ், ஆங்கிலம் என இரு மொழி ஆக்கங்களையும் உள்வாங்கி வெளியாகிறது.
இளவேனில் சஞ்சிகை ஒவ்வொரு வருடமும் தமிழர் திருநாளன்றும் ஆடிப்பிறப்பன்றும் அச்சிலே வெளியாகிறது.