Arts
10 நிமிட வாசிப்பு

பரிமளாவும் Danielலும்

September 11, 2024 | இமாம்

நான் படித்த வகுப்பில் பரிமளாவும் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை இருந்தார் என்பதை தவிர எனக்கு பரிமளாவை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதற் குத் தேவையும் இருந்ததில்லை. ஆனால் இன்று மட்டும் என்ன தேவை வந்தது? ஏன் எனக்கு பரிமளா ஞாபகத்துக்கு வந்தாள்? இல்லல! ஞாபகத்திற்கு வரவழைத்தேன்! அவளின் முகம் எனக்கு இன்னமும் அதிகமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தமிழ் படங்களில் காண்பிக்கும் ஒரு ஏழைச் சிறுமியின் உருவமாகவே என் மனக் கண்களில் அவள் உருவம் வந்து போகிறது.

கடினமாக யோசித்ததில் ஒரு நிகழ்வு மாத்திரம் நவஉ. நினைவுக்கு வந்தது. 11-ம் வகுப் பில் எனக் குத் தமிழ் ஆசிரியைக்கு மட்டுமே பயம், ஏனென்றால் அவர் வெறும் டீச்சர் மட்டுமல்ல, சேலையில் நடமாடும் ஒரு இராட்சசி! அதனால் அவர் சொல்லை நான் ஒருபோதும் தட்ட நினைத்ததுகூட இல்லை.

ஒருநாள் அவர் பரீட்சை மதிப்பெண்களை மாணவர்களிடம் கொடுத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவரவர் புள்ளிக்கு ஏற்றபடி திட்டி அல்லது அடித்து சம்பவம் நடத்தினார். நான் எப்பொழுதும் 90 புள்ளிகளுக்குக் குறையாமல் வாங்குவேன். ஆனால் அன்று அவர் “னுயளைல இங்க வா” என்று கூப்பிட்ட தொனியிலேயே எனக்கு விளங்கினது ஒரு தரமான சம்பவம் காத்திருக்கு என்று. ஆனால் அது என்ன என்றுதான் தெரியவில்லை! நானும் பவ்வியமாய் பேய் நின்றேன்.

“என்ன, நீ மட்டும் படிச்சா காணுமோ? மற்ற பிள்ளைகள் மொக்காவே இருக்க வேணுமோ?”

எனக்கு ஒரு விதத்தில் ‘அப்பாடா’ என்று இருந்தது. அப்ப எனக்கு நல்ல மார்க்ஸ்தான்! ஆனால், ஏன் இந்த கதை சொல்றா என்று விளங்கவில்லை. மற்றபிள்ளைகள் படிக்காட்டில் அதில் என்ட பிழை என்ன இருக்கு? அது டீச்சரின் பிழையாக வேணுமென்றால் இருக்கக் கூடும்! அவருக்கு ஒழுங்கா படிப்பிக்கத் தெரிய வில்லை! இது வெறும் அைனெ எழைஉந தான். வேற ஆசிரியர் என் றால் அதுவே main voice ஆக இருந்திருக்கும். ஆனால் இவரிடம் இதைச் சொல்லி, இருட்டடி வாங்குவான் ஏன் என்று நினைத்து அமைதியாக நின்றேன்.

“என்ன முழிச்சுப் பார்க்கிறீர்? நீ மட்டும் படிச்சா போதாது! ஏய் பிள்ளை பரிமளா இங்க வா” என்று சத்தமாக அவர் கத்த பரிமளா தடுமாறி பின்வாங்கிலில் இருந்து ஓடி வந்தாள். அவரின் மறுபக்கத்தில்

நின்றாள்.

அவர் பரிமளாவின் பரீட்சைத்தாளை என்னிடம் தந் தார் அதில் 0மூ என்று இருந்தது. உடனே நான் “இது பரிமளாவின் பரீட்சை தாள்…” என்று திருப்பிக் கொடுக்க முயற்சித்தபோது அதை சிறிதும் பொருட்படுத்தாது, தனது கையில் வைத்திருந்த எனது பரீட்சைத்தாளை என்னிடம் கொடுத்தார். ஒரு கணம் நவஉ. முகம் மலர்ந்தது ஏனெனில் அந்தப் பரீட்சையில் எனக்கு 99 மூ புள்ளிகள் கிடைத்திருந்தது.

“இதில சந்தோஷப்பட என்ன இருக்கு? இது உனக்கு படிக்குறன் என்ற திமிர்!” என்று சம்பந்தமில்லாமல் சத்தம் போடத் தொடங்கினர்!

நான் திரும்பி என் நண்பர்கள் இருக்கும் திசையைப் பார்த்தேன், எல்லோருக்கும் ஒரு நமட்டுச் சிரிப்பு. அது ஒரு விதத்தில் எனக்கும் தொற்றிக் கொண்டது. நாம் எல்லோரும் எப்பவும் இந்த டீச்சருக்கு மணவாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியைத்தான் எங் களிடம் காட்டுகிறார் என்று எமக்குள் சொல்லிச் சிரித்திருக்கிறோம்! இன்றைக்கு இவருக்கு வீட்டில் என்ன சண்டையோ என்று நங்கள் கண்களால் கதைத்து நகைத்தோம்.

நவஉ. நகைப்பு அவருக்கு கோபத்தைக் கூட்டியது. இண்டையில் இருந்து நீதான் பரிமளாவுக்கு படிப்பிப்பாய், அவள் அடுத்த முறை 35% வாங்காவிடில் உனக்கு இருக்குது” என்று கத்தி உருவாடி முடித்தார்!

இப்ப யோசித்துப் பார்க்க 11-ம் வகுப் பில் ஒரு மாணவர் தாய்மொழியில் 0 மார்க்ஸ் வாங்குகிறார் என் றால் எங்கோ பிழை நடந்திருக்கிறது என்று விளங்குகிறது. அதுதான் நான் பரிமளாவை பற்றி 30 வருடங்கள் கழித்து யோசித்துப் பார்க்கக் காரணம். ஏன் நான் அதை இன்று யோசிக்கிறேன்? வாழ்க்கை நம்மை எப்பொழு தும் யோசிக்கவிடாமல் ஒரு நதியோடுவது போல கொண்டுசெல்லும்!

பாடசாலை, முடிந்ததும் பல்கலைக்கழகம். அங்கும் மருத்துவம் படித்ததால் படிப்பு! படிப்பு! படிப்பு! என்று ஆறு வருடங்கள் ஓடிவிடும், பின்பு இன்டர்ன்ஷிப், வேலை என்று இரண்டு மூன்று வருடங்கள் கழிந்து விடும். பின் 30 வயதுக்குள் கல்யாணம், அதுவும் ஒரு டாக்டர் என் றால் இன்னொருடாக்டரைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும்! பின் migration, மீண்டும் படிப்பு படிப்பு! பின் இரண்டு பிள்ளைகள், அவர்களை வளர்ப்பது! அதுவும் பெண்களுக்கு பிள்ளைகளையும், குடும்பத்தையும் கவனிக்க இலகுவாக இருக்கும் என்பதால்தான்!

ஒரு வழியாக GP ஆக 30 வருடங்கள் கழிந்து விட்டிருந்தன. எனக்காவது 30 வருடம் கழித்து சிந்திக்க நேரம் கிடைத்தது. ஆனால் என் கணவர் இன்னும் ளிநஉயைடணையவழை specialisation செய்து surgeon ஆக வேலையும் படிப்புமாக இருக்கிறார்!

எனக்கு கிடைக்கும் நேரங்களில் என் மகன் களின் தமிழ் கத்தோலிக்க பள்ளிகளுக்கு சென்று சிறுவர்களுக்கு பைபிள் வாசிப்பேன். அங்குதான் னுயெநைட லை நான் சந்தித்தேன்.

3-ம் வகுப்பு சிறுவர்கள் வழமை போல மிகவும் கூச்சத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள்.

அவர்களின் ஆசிரியர் “இன்று முதல் Daisy டீச்சர் உங்களுக்கு பைபிள் கதை வாசிப்பார்” என்று கூறினார்.

எனக்குக் கற்பித்தலில் எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனால் சுதாகரித்துக் கொண்டு என் மகன்களுக்கு கதை வாசிக்கும் முறையிை; இதனை கையாளலாம் என்று நினைத்து, “எல்லோரும் உங்கள் கதிரைகளைக் கொண்டு வந்து சுற்றி உட்காருங்கள்” என்றேன்.

நான் சொல்லி வாய் மூடும் முன் கதிரையை இழுத்துவந்து எனக்கு அருகில் இழுத்துப்போட்டு ஒரு பையன் உட்கார்ந்தான்.

அவன் தான் Daniel. நான் அவன் ஆர்வத்தைப் பார்த்து வியந்தேன்! வியப்பை அவன்மீது புன்னகையாய் மாற்றினேன்!

Daniel ஒரு twin. அவனது சகோதரி Maryயும் அந்த வகுப்பிலேயே இருந்தாள். வாராவாரம் நான் பைபிள் கதை வாசிக்கச் செல்வதை Daniel மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

அது உண்மை என்பது போல இடையில் சில வாரம் நான் செல்லாததைக் கவனித்து, மீண்டும் ஒரு நாள் என்னைக் கண்டபோது “ஏன் டீச்சர் நீங்கள் வாசிக்க வரவில்லை” என்று கேட்டான். நான் மீண்டும் வாசிக்க சென்றபோது Daniel என் கதிரை நுனியில் வந்து அமர்ந்து கொண்டான். என் விரல்களைப் பிடித்துக் கொண்டு வாசிக்க முயற்சி செய்தார். ஆனால் அவனுக்கு தமிழ் எழுத்துக்கள் தெரியவில்லை. நான் சொல்வதை மனப்பாடம் செய்து வாசிப்பதைப்போல பாசாங்கு செய்தான். ஒரு டாக்டராக எனக்கு, அவனுக்கும் வகுப்பில் உள்ள மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாமல் இல்லல!

வருட இறுதியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் Danielலும் Maryயும் என் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள். அவன் வகுப்பு மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் தருணம் வந்தது, ஒவ்வொருவராக அழைத்தார்கள். Mary என்ற தனது சகோதரியின் பெயர் வந்ததும் சந்தோஷமாக உரக்கக் கைதட்டினான். பின்பு என்னிடம் திரும்பிக் கேட்டான் “எப்ப டீச்சர் என்ட turn வரும்?”

இந்த கேள்வி என்னைத் தூக்கிவாரி போட்டது. அந்த 9 வயதுச் சிறுவனிடம் எப் படிச் சொல்ல முடியும் இந்தசமூகக்கட்டமைப்பில் எப்பவுமே Danielக்கு turn வராது என்று! நான் சொல்வதறியாது அவனயே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தத் தருணம் தான் Danielக்கான ஒரு உலகம் பற்றி யோசிக்கத் தொடங்கினேன். நான் படித்த படிப்பால் இதுவரை கிடைத்தது வெறும் பொருளாதார ரீதியான நன்மையே தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை என உணர்ந்தேன். சிறுவர்களின் Mental Health சம்பந்தமாக சிந்திக்கத் தொடங்கினேன்! வாசிக் கத் தொடங்கினேன்! Mental Health சம்பந்தமாக எங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை ஆராயத் தொடங்கினேன்! அது எப்படி எங்கள் ஊரில், எங்கள் பாடசாலை காலத்தில் மாணவர்களுக்கு எந்த Mental Health பிரச்னையும் இருக்கவில்லை?

அப்பொழுது என் நினைவுக்கு வந்ததுதான் பத்தாம் வகுப் பில் தமிழுக்கு பரிமளா எடுத்த பூஜ்ஜியம். பரிமளாவுக்கு ஏதோ பிரச்சனை இருந்திருக்கிறது.

ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. இல்லை, தெரிந்தும் தெரியாமல் இருந்திருக்க வேண்டும்.

இல்லை இல்லை, என் தமிழ் ஆசிரியருக்குத் தெரிந்திருக்கிறது!

பரிமளாவுக்குப் புரியும்படியாக அமைதியாகவும், ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் ஒருவர் கற்பித்தால் பரிமளாவும் 35 புள்ளிகள் எடுத்துத் தமிழில் சித்தி பெற முடியும் என்று யோசித்துத்தான் என்னை பரிமளாவுக்குப் படிப்பிக்கச் சொல்லி இருக்கிறார்.

அந்த வயதில் எனக்கு அது எதுவுமே புரியவில்லை! ஆனால் இன்றும் பரிமளாவும் Danielலும் ஒரே புள்ளியில் நிற்பது புரிந்தும் நான் செய்வதறியாது நிற்பது ஏன் என்றும் புரியவில்லை! ஆனால் நான் ஒரு தனி டாக்டராக இந்தசமூகக் கட்டமைப்பை மாற்றிவிட முடியுமா? நான் பெற்ற 99%ம், பரிமளா பெற்ற 0% போல எதற்கும் பயன் படாமல் இருப்பது புரிந்தது.

ஆனால் எல்லாம் என்றோ எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பித்துத்தான் ஆக வேண்டும்! அது இன்று என்னிடத்தில் இருந்து!

இமாம்


16 பார்வைகள்

About the Author

இமாம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்