
விமானம் நிலத்தை விட்டு takeoff ஆகியது. எனது கண் மூடியது. நான் கண் விழித்தபொழுது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விமானம் தீப்பற்றி இருந்தது. எனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியே ஓடினேன். அடுத்த கணமே விமானம் வெடித்துச் சிதறியது.
“இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருவார்கள்” என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு குதிரை! “குதிரை நாட்டிற்கு உங்களை வரவேற்கிறேன். நான் உங்கள் சேவகன். எம் நாட்டை சுத்திக்காட்ட நான் இங்கே வந்துள்ளேன்.” என்று கூறியது. நான் ஆச்சரியத்தோடு குதிரை மீது ஏறினேன். அது என்னை தனது நாட்டைச் சுற்றிக் காட்டியது. நாங்கள் இருவரும் அறிமுகமாகி நண்பர்கள் ஆனோம். நான் வீரனுடனும், வீரனின் நண்பர்களுடனும் பல மாதங்கள் வசித்தேன். நான் எனது குடும்பத்தை மறந்து வேறு உலகத்தில் வாழ்ந்தேன்.
நான் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழும்பினேன். ஏன் என்றால் எனது நண்பன் வீரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அப்பொழுது 2 குதிரைகளின் பேச்சு என் காதில் விழுந்தது. அந்த வார்த்தைகள் என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விறைத்துப் போனேன். “ஆனந்தனை இன்றுடன் துரத்தி விடுவோம். அவன் எங்களைப் போல் இல்லையே!” என்று கூறியது. அப்போது தப்பி ஓடலாமா என நினைத்தேன். ஆனால் என் உயிர்த் தோழன் வீரனுக்கு நன்றி செலுத்த ஆசைப்பட்டேன். அதனால் பிறந்த நாளிற்கான ஏற்பாடுகளை தொடங்கினேன். எங்கே செல்வது? எப்படிச் செல்வது? என்ன செய்வது? என்ற பல கேள்விகளுடன் அன்றைய நாள் கழிந்தது. ஆனால் வீரன் மிகவும் சந்தோசமாக தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தான்.
எனக்கு தூக்கமே வரவில்லை. வீரனும் நண்பர்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். நான் மெதுவாக அவ்விடயத்தை விட்டு வெளியேறினேன். வீரனிடம் சொல்லாமல் செல்வது கவலையாக இருந்தாலும், வேறு வழி இல்லாமல் வீட்டைவிட்டு சென்றேன்.
எங்கோ சென்று இறுதியில் ஆடு நகரத்திற்குச் சென்றேன். அங்கே லக்ஷ்மி என்ற ஆட்டை சந்தித்தேன். லக்ஷ்மியும் வீரனைப் போல் இருக்கும் என்று நம்பினேன். லக்ஷ்மியுடன் நண்பனாவதற்கு முயற்சி செய்தேன். லக்ஷ்மி என்னை ஆடு அரசரிடம் அழைத்துச் சென்றது. ஆடு அரசனையும், மாளிகையையும் பார்க்க சந்தோசமாக இருந்தது. ஏன் என்னை இங்கே கூட்டி வந்தது என்று தெரியவில்லை. அந்த அரசனோ என்னை தூக்கில் இடுமாறு கட்டளை இட்டார். ஏன் என்று புரியாமல் அதிர்ச்சி அடைந்தேன். என்னைப்போல் ஒருவன் இளவரசனை கடத்தி கொலை செய்ததனால் அவர்கள் என்னை தூக்கிலிட முடிவெடுத்தனர். “ இது எல்லாமே ஆடுகள்தானே, நான் கெதியா தப்பிக்கலாம் என்று திட்டமிட்டேன். ஆனால் எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாகத் தப்பிக்க முடியாமல் சிறையில் தவித்தேன்.
தண்டனை நாளும் வந்தது. அரசன் எனது தண்டனைக்காக தனது முழு நாட்டையும், குதிரை நாட்டையும் கூட்டி இருந்தார். அதில் மாடு, ஆடு, குதிரை, பன்றி என எல்லாம் இருந்தன. எனக்கு நல்ல பயமாக இருந்தது. அப்பொழுது தான் கவனித்தேன். எல்லா மிருகங்களும் சேர்ந்து ஆடுகளுடன் சண்டை போட்டனர். வீரன் எனக்காக சண்டை போடுவதைப் பார்த்தேன். இப்போது பயம் குறைந்தது. என்னைக் கொண்டுவந்த காவலர் ஆடுகள் சண்டைக்குச் சென்றன.
இதுதான் சரியான நேரம் என்று நினைத்து தப்பி ஓடினேன். என்னைக் கண்ட காவலர்கள் என்னைத் துரத்தினர். அவர்கள் அருகில் வர நான் மலையில் இருந்து குதித்தேன்.
“ஆனந்தன்…” என்று அம்மா அலறிய சத்தம் கேட்டது. கண் விழித்தேன். என்னை சுற்றி இருந்த அனைவரும் அழுது கொண்டு இருந்தனர். நான் விமான விபத்திற்குப் பிறகு கோமாவில் இருந்துள்ளேன் என்றும் இப்பொழுது ஒரு செக்கண்ட் எனது இதயம் நின்று வந்ததாகவும், எல்லாமே சிவனின் அருளால்தான் என்றும் அம்மா சொன்னார். அதை என்னால் நம்பமுடியவில்லை. அனைவரும் மகிழ்ந்தனர்.