இளவேனில், வருடம் இருமுறை வெளியாகின்ற சமூக இலக்கிய இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. அவுஸ்திரேலியத் தமிழ் சமுகத்தின் வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் அச்சில் பதிப்பது மட்டுமல்லாது, அக்கருத்துக்களை எமது சமூகத்தினுள் ஊடுருவச் செய்து சிறு சிந்தனையையாவது தூண்டும் அவாவில் பல நிகழ்வுகளையும் முன்னெடுக்கின்றோம். ஒவ்வொரு இளவேனில் வெளியீட்டுக்குப் பின்னரும் எமது வாசகர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து, அவ்வெளியீட்டினைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள, வெளியீட்டின் கருத்துக்களை அலசி ஆராய வாசகர் முற்றம், எமது சிறார்களின் எழுத்துத் திறமையைத் தூண்ட ‘தமிழில் எழுதுவோம்’ – சிறுவர்களுக்கான தமிழ் எழுத்துப் பயிலரங்கம், தமிழ் சமூகத்தின் இளைஞர்களின் வாழ்வியலை அறிந்துகொள்ளும் முயற்சியாக ‘இளைஞர் சந்திப்பு’, தமிழ் சமூகத்தின் மனதின் கேள்விகளை, சிந்தனையைத் தூண்ட கலந்துரையாடல்கள் போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. இளையோரும், வளர்ந்தோரும் தயக்கமின்றித் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் களமாக இளவேனில் தொடர்ந்தும் செயற்படும்.
எமது சமுகத்தின் ஒவ்வொருவரது குரலையும் கேட்க இளவேனில் காத்திருக்கிறது.
வாசகர் முற்றம் – 2023 ஆடி
வாசகர் முற்றம் – 2024 தை
வாசகர் முற்றம் – 2024 ஆடி
தமிழ் எழுத்துப் பயிலரங்கம்
இளைஞர் சந்திப்பு
கலந்துரையாடல் : தனியார் மற்றும் அரசு பள்ளிகள்
கலந்துரையாடல் : Entrepreneurship – தொழில்முனைவு முயற்சிகள்