CTM ஏற்பாடு செய்த தனியார் மற்றும் அரச பாடசாலைகள் பற்றிய ஒரு கலந்துரையாடலில் பங்கேற்க நான் அழைக்கப்பட்டேன். விவாதத்தில் என் எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகையால், அரசுப் பள்ளியில் படித்து, பின் தனியார் பள்ளிக்குச் சென்ற 11 வயதுச் சிறுமியான நான், இந்த இதழில் எனது பயணத்தை எழுத முடிவு செய்தேன்.
எனது பள்ளி வாழ்க்கை எனது வீட்டிற்கு மிக அருகில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் தொடங்கியது. என்னைப் பொறுத்தவரையில் அரசுப் பள்ளியில் ஆச்சரியமூட்டும் வகையில் திறமையுடைய சிறப்பான ஆசிரியர்கள் இருந்ததுடன், பிற பாடத்திட்ட நடவடிக்கைகளில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் இருந்தன. ஒரே ஆசிரியர் எல்லாவற்றையும் கற்றுத் தந்ததால் அரசுப் பள்ளி எனக்கு என் கற்றலில் நம்பிக்கையை அளித்தது.
எல்லாவற்றிலும் நமது பலவீனம் என்ன என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். என் வகுப்புத் தோழர்களாக நான் விரும்பும் நபர்களால் நான் சூழப்பட்டிருந்ததால், நாங்கள் கற்றுக்கொண்டிருந்த சூழல் பாதுகாப்பாக இருந்தது. நான் அரசு பள்ளியில் கொண்ட நட்பு மிகவும் சிறப்பானது, இன்று வரை நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். நான் 4ஆம் ஆண்டு வரை அரசுப் பள்ளியில் படித்து வந்தேன், பின்னர் நான் ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்தேன்.
4ஆம் ஆண்டில், எனக்கு ஒரு தனியார் பள்ளியைக் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டது. அப்பள்ளியில் மாணவர்களுக்குக் கிடைத்த பல வாய்ப்புகளைக் கண்டு வியந்தேன். கச்சேரிகள், ஏபிஎஸ் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வழிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. இவை அங்கு கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களுள் ஒரு சில மட்டுமே. அத்தனியார் பாடசாலையில் எனது திறமைகளை ஒரே நேரத்தில் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நான் உணர்ந்தேன். உதாரணமாக கலை, விளையாட்டு மற்றும் கல்வி. ஒரு மதிப்புமிக்க தனியார் பள்ளியை எனது பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தேர்ந்தெத்தது நான் எடுத்த சிறந்த முடிவாகும். அரசுப் பள்ளியை விட்டு நீங்குவது எளிதான முடிவாக இருக்கவில்லை. அந்த மாற்றம் தேவைதானா என்று முடிவு செய்ய பல நாட்கள் ஆனது. அரசுப் பள்ளியில் கல்வி பயின்றது பல அற்புதமான அனுபவங்களை எனக்கு அளித்திருந்தது. மேலும் எனக்கு அங்கே சிறந்த பல நண்பர்கள் இருந்தார்கள். நீண்டநாள் நண்பர்களை விட்டுப் பிரிவது கஷ்டமாக இருந்தது.
தனியார் பள்ளிக்குச் செல்வதற்காக, ஸ்கொலர்ஷிப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வது மிகக் கடினமாக இருந்தது. எனது பாடசாலைப் பயணத்தில் எனது பெற்றோரின் வழிகாட்டலுடன் தொடர்வது கடினமாக இருந்தது. ஆனாலும் நான் விடாமல் நிறைய பயிற்சி செய்தேன். எப்படியாவது பரீட்சையில் சிறந்த புள்ளிகள் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தேன். தனியார் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் மிகவும் நிம்மதியாக இருந்தது. நான் தனியார் பள்ளிக்குச் சென்ற பின் பாரிய வித்தியாசத்தை உணர்ந்தேன். உதாரணமாக சிறிய அளவிலான வகுப்புக்கள், தனிப்பட்ட அக்கறை, பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதிக வாய்ப்புகள். சரியான நேரத்தில் அல்லது முன்னதாகவே அதிக கற்றல் நடவடிக்கைகளைப் பெற முடிந்ததோடு வலைப்பந்து மற்றும் இசையில் எனது திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. அங்கே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். எனக்கும் அதில் தனியாக பங்கேற்க வாய்ப்புக் கொடுத்தார்கள். என்னுடைய முடிவில் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
தனியார் பாடசாலையா அல்லது அரசுப் பாடசாலையா என்பது கடினமான தேர்வு, ஆனால் எதுவாக இருந்தாலும் எல்லாம் நல்லதுதான். உங்கள் பிள்ளைக்கு எது பொருத்தமானது என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். கல்வி அனைவருக்கும் முக்கியமான தேவையாக கருதப்படுகிறது. பாடசாலை என்பது மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தகவல் மற்றும் திறன்களைப் பாதுகாக்கும் இடமாகும்.