Arts
10 நிமிட வாசிப்பு

எவ்வளவு பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா

February 24, 2024 | அபிதாரணி சந்திரன்

மனிதச் சலனேமயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ”ஓ” என்று அலறிக் கொட்டிக்கொண்டிருந்தது.

இராட்சத இடி முழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைகளுக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின. வௌவால்கள் எல்லாம் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது.

“அவ்வ்வ்வ்..”

என்று பயத்தில் அலறினார் வடிேவலு. அருகிலிருந்த விஜய் அவரின் வாயை அவசரமாகப் பொத்தினார்.

“அண்ணை .. சத்தம் போடாதீங்க. சிங்கத்துக்குக் கேட்டிடப்போகுது”

“சிங்கமா? அடக் கிராதகா… சிவேனன்னு வீட்டில சிக்கின் சாப்பிட்டுக்கொண்டிருந்தவன சிங்கத்துக்கே சைட் டிஷ்ஷா மாத்தப்போறிங்களாடா?”

“இல்லை அண்ணை. நான் என் காதலிய மீட்கணுமா வேணாமா?”

“டேய், நீ உன் காதலிய மீட்கிறதுக்கு நான் எதுக்கடா சாகணும்?”

“சும்மா வாங்கண்ணை. நண்பன் என்றால் காதலுக்காக சாகணும் அண்ணே”

நரி ஒன்று எங்கோ ஊளையிட்ட சத்தம் கேட்டது. அடித்த மின்னல் வெளிச்சத்தில் காட்டின் நடுவே தனியே அந்த மலை நின்றது தெரிந்தது. அங்குதான் விஜய்யின் காதலியை ரவுடிக்கும்பல் கடத்தி வைத்திருந்தது. அந்தக் கும்பலின் தலைவி ஒரு கிழவி. அவளின் கோபம் ஊருக்கே தெரிந்தது. ஒரு முறை சந்தையில் கடைக்காரர்களிடம் பணம் வசூலிக்கக் கிழவியும் அவளது கும்பலும் வந்திருந்தது.

காவல்துறையினர்கூட அவளுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு மீன் கடைக்காரர் “நான் ஏன்

உனக்குக் காசு கட்ட வேண்டும்?” என்று வீராப்பாகப் பேச, அங்கே பக்கத்துச் சாப்பாட்டுக் கடையில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய்ச் சட்டியைத் தூக்கி அப்படியே கடைக்காரரின் தலையில் கொட்டிவிட்டாள் அந்தக் கொடூரக் கிழவி.

“என்னடா, ஒரே திகிலா இருக்கே. பாட்டின்னா வடைல குத்துப்போட்டு, தட்டி எண்ணெயில போடுவாள்ப்பா.

இந்தக்கிழவி கடைல குத்துப்போட்டு, ரெண்டு தட்டுதே?”

வடிவேலு பயத்துடன் கேட்க, விஜய் பதில் அளித்தார்.

“இது ரவுடிப் பாட்டி அண்ணே”

“ரவுடி பேபி கேள்விப்பட்டிருக்கேன். ரவுடிப் பாட்டிையக் கேள்விப்படல. டேய் இது எனக்கு சரி வராது.

கிழவி உன் காதலியைத் தூக்கினாத் தூக்கட்டும். திரிஷா இல்லாட்டி நயந்தாரா. நீ என்ன எல்லாப் படத்திலயும் ஒரே கதா நாயகியையா பயன்படுத்துவாய்? பேசாம வாடா ஓடிடலாம்”

“இல்லை அண்ணை. அது எனக்கு மரியாதை இல்லை. நான் ஒரு பக்கா திட்டம் தீட்டியிருக்கிறன். அதன்படி செய்யலாம்”

“என்னடா திட்டம் அது?”

“நான் இங்கேய பதுங்கியிருந்து யாராவது வராங்களான்னு பாக்கறேன். நீங்க போயி கிழவிகிட்ட இருந்து என் காதலிய மீட்டு வாங்கோ”

வடிேவலு “போடா’” என்று சொல்லியபடி ஒரு கட்டையை எடுத்து அடிக்கப்போக, மரத்தின் மேல் நின்ற காகம் ஒன்று அவர் தலையில் பீய்ச்சியபடியே மெலெழுந்து பறந்துபோனது.

“இதுகளும் சதி  பண்ணுதே” என யோசித்தார் வடிவேல். ”எனக்கு ஏழரை உச்சத்தில இருக்கு, மேற்கொண்டு நீயும் என்ன சீண்டி பிரச்சனையைக் கூட்டப் போறியா” என்று விஜயிடம் கேட்டர்.

 ”சரிதான் போண்ண, நீ இல்லண்ணா என்ன? நான் கேட்டன் எண்டா என்ட  பொடியல்  வரிசை கட்டி நிற்பாங்க” என்று பதில் சொன்னார் விஜய்.

ஒரு ஓரமாய்ச் சென்று விஜய் தொலைபேசியில் ஒரு மணி நேரமாகக் கதைத்துக் கொண்டிருந்தான். சில நொடிகளில் ரஜினி, கமல், பிரேம்ஜி, சூர்யா, தனுஷ் வந்தார்கள்.

“மச்சி எவ்வளவோ பண்ணிட்டோம் இதப் பண்ண மாட்டோமா” என்று வீரத்தோடு பிரேம்ஜி சொன்னான்.

விஜய்யினுடைய திட்டத்தின்படி அனைவரும் செயல்பட ஒத்துழைத்தார்கள்.  வடிவேலு ஒரு ஓரமாக ஒரு மரத்திற்குப் பின்னால் ஒழிந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

 திரிஷாவின் கைகள் மரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. அவளைச் சுற்றிக் கிழவியின் அடியாட்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிழவி ஓரமாக இருந்து பகோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். விஜய்யும், அவனது நண்பர்களும் கும்பலாக கூடி நின்றார்கள்.  “வாங்கடா வாங்க, என்னடா இன்னும் ஆளைக் காணுமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோட சிங்கக் குட்டிகளைத் தாண்டி அவளைக் கூட்டிட்டு போயிடுவீங்களா” என்று பீத்தினாள் கிழவி.

”அப்படியா செல்லம், கொஞ்சம் இங்க பாருமா” என்று ரஜினி சொல்ல அனைவரும் ஒரு ஓரமாகச் சென்றார்கள். நடுவில் பிரேம்ஜி கோபால் என்பவரின் வடிவத்தில் ஒரு ஸ்டைலாக நின்றார்.  கோபால் என கத்தி, இடிந்து போய் உட்கார்ந்தார் அக்கிழவி.  கோபால் அக்கிழவியின் முன்னாள் காதலன்.  சூழ்நிலை காரணத்தால் பிரிந்து வெவ்வேறு திசைகளை நோக்கிச் சென்றார்கள். ஆனால் கோபால் இறந்துவிட்டார். பிரேம்ஜி அவரிடம் சென்று கட்டிப்பிடித்து அழுதார்.

அந்த நேரத்தில் விஜய், ரஜனி, கமல், சூர்யா, தனுஷ் அனைவரும் கிழவியின் அடியாட்களை அடித்து, திரிஷாவை மீட்டார்கள். விஜய்யும் திரிஷாவும் ஒன்று சேரும் நேரம் பார்த்து வடிவேலு மறைந்திருந்த மரத்தை விட்டு வந்தார் “ஹலோ எக்ஸ்கியூஸ் மீ ” வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தார்.

 விஜய் அவரை மேலும் கீழும் பார்த்தார். “ஏய் மான் இன்னா லுக்கு” நான் மாட்டன் எண்டு சொன்னதால தான் உனக்கு திரிஷா கிடைச்சா, இல்லையென்றால் இவதான் இன்னைக்குப் புலிக்கு மெயின் டிஷ்” என்று நக்கல் அடித்தார்.

அனைவரும் சிரித்துக் கொண்டு வீடு திரும்பினார்கள். தனது காதல் வெல்லவில்லை என்பதால் மற்றவர்களது காதல் வெல்லக்கூடாது என்று நினைத்தாள் ரௌடிக் கிழவி.  தனது காதலனைக் கண்டவுடன் கிழவி தனது 20 வயதுக்குச் சென்று விட்டாள்.  ”ஆஹா… பிரேம்ஜி எங்கய்யா” என்றார் வடிவேலு. ஐயோ அவரை மறந்து விட்டோமே என்று எல்லோரும் பதறினார்கள்.

ஒரு பேச்சுக்குச் சொன்னா, உண்மையிலேயே என்னை லைக் பண்ணிடுவாளோ என்று அழுத பிரேம்ஜி இரவு முழுவதும் கிழவியின் அழுகையைக் கேட்டு சலித்துப் போனான். பிரேம்ஜி தொல்லை தாங்க முடியாமல் கிழவிக்கு மயக்க மருந்து கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டான். விஜய்யும் வேண்டாம் எவனும் வேண்டாம் நான் எனது ஆருயிர் தோழன் சிம்புவோடேயே இருந்துட்டு போறேன் என்று பதறி ஓடினான் பிரேம்ஜி.

அபிதாரணி சந்திரன்


45 பார்வைகள்

About the Author

அபிதாரணி சந்திரன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்