பரபரப்பான நகரங்களின் மத்தியில், அறிவிப்புகளின் இடைவிடாத சலசலப்பும், இணைப்புகளின் கவர்ச்சிக்கு மத்தியில், ஒரு அமைதியான நெருக்கடி உள்ளது: தனிமையின் தொற்றுநோயில் இளைஞர்கள் முடங்கியிருக்கிறார்கள். வானளாவிய கட்டிடங்கள் விண்ணைத் தொடும் அதே வேளையில், டிஜிட்டல் தளங்கள் முடிவற்ற இணைப்புகளை உறுதியளிக்கின்றன. பல இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். ஆனால் இந்த கடுமையான முரண்பாட்டை தூண்டுவது எது? ஒரு புலனாய்வுப் பயணத்தைத் தொடங்குவோம்.
Alone vs Lonely: A nuanced difference
ஒரு இளம் பெண் கமலா, உணவகத்தில் அமர்ந்து, புத்தகத்தில் மூழ்கி, தனிமையில் திருப்தி அடைந்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அருகில் உள்ள மேசையில், நண்பர்கள் குழுவால் சூழப்பட்ட அகிலன், இன்னும் தனது எண்ணங்களில் தொலைந்து, வெறுமையை உணர்கிறார்.
கமலா தனது கணநேர தனிமையை அனுபவிக்கும் போது, அகிலன் தனிமையின் ஆழ்ந்த வலியுடன் போராடுகிறார்.
சிறிது நேரத்திற்கு தனியாக இருக்கும் பொழுது துரித வாழ்க்கையிலிருந்து ஓய்வு வரும். இது தன்னார்வமாகவும், நேசத்துக்குரியதாகவும் இருக்கலாம், வாழ்க்கையின் குழப்பத்திலிருந்து தனிநபர்களுக்கு ஓய்வு அளிக்கும். இதற்கு நேர்மாறாக, தனிமை என்பது வெறுமை, தனிமைப்படுத்துதல் மற்றும் மற்றவர்களிடமிருந்து துண்டிப்பு ஆகியவற்றின் ஆழமான உணர்வால் வகைப்படுத்தப்படும் ஒரு உணர்ச்சி நிலை. ஒருவர் கூட்டத்தால் சூழப்பட்டிருந்தாலும், தனிமையாக உணர முடியும். தனிமை என்பது உங்களை சுற்றி உள்ள மனிதர்களின் உடனிருப்பு இல்லாமை அல்ல. அர்த்தமுள்ள தொடர்புகளும், புரிந்துணர்வும் இல்லாமையே.
நாம் ஏன் தனிமையை உணர்கிறோம்
இன்றைய வேகமாக செல்லும் உலகில், நாம் வைத்திருக்கும் நட்புகள் பல மேலோட்டமான உறவுகளாக இருக்கின்றன. சமூகவலைத்தளங்களினால் நாம் பல நண்பர்கள் (followers) வைத்திருந்தாலும், உதவி தேவையான நேரங்களில், அல்லது கடிணங்களை அனுபவிக்கும்பொழுது அவர்களில் எத்தனை பெயர் எமக்கு தோள் கொடுப்பார்கள்?
“முகப்புத்தகம்” “இன்ஷ்டகிராம்” போன்ற சமூகவலைத்தளங்களினால், நாம் உலகின் வெவ்வேறு தேசங்களிலிருப்பவர்களுடன் எளிதாக தொடர்புகொண்டு, எமது வாழ்கையை பற்றி பேசமுடியும். ஆனால், சமூகவலைத்தளங்களில் ஒரு பெரிய நட்பு வட்டத்தைக் காட்டுவது, அல்லது ஒவ்வொரு பயணத்தையும் ஆவணப்படுத்துவதற்காக பாவனை செய்து, அதற்கு முக்கியதுவம் கொடுப்பதனால் உண்மையான நட்புகளை அமைப்பது கடினமாக உள்ளது. இதனால் இளைஞர்கள் பலருடன் தொடர்புகொண்டிருந்தாலும் தனிமையை உணர்கிறார்கள்.
மேலும், இந்த டிஜிட்டல் யுகத்தில் நாம் மற்றவர்களுடன் உரையாடும் விதம் மாறுபட்டிருக்கிறது. அர்த்தமுள்ள உரையாடல்களுக்குப் பதிலாக, பல தொடர்புகள், விருப்பங்கள் (likes), கருத்துகள் (comments), மற்றும் எமோஜிகளாக மாறியுள்ளன. நேருக்கு நேர் உரையாடும் பொழுது கேட்கும் உண்மையான சிரிப்பு, மற்றும் மனதைக் கவரும் உரையாடல்கள் டிஜிட்டல் மொழியில் குறைவாக இருப்பதனால் பலர் தனிமையை உணர்கிறார்கள்.
இதற்கு மேலாக, நாம் அவுஸ்திரேலியாவில் வளரும்பொழுது, தமிழ் நண்பர்களை வைத்திருப்பது கடினமாக உள்ளது. தமிழ் பாடசாலை, அல்லது தமிழ்ச் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லாமல் இருந்தால் ௭மக்கு தமிழ் நண்பர்களை உருவாக்கிக்கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இது நாம் அனுபவிக்கும் தனிமையிற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
நாம் வாழ்கையில் அனுபவிக்கும் சில போராட்டங்கள் ஒரே கலாசாரத்தை சேர்ந்தவர்களால்தான் முழுதாக விளங்க முடியும். உதாரணமாக, வேறு கலாச்சாரங்களை சேர்ந்த நண்பர்களுடன் உரையாடும் பொழுது, சில கலாச்சாரத்தை சார்ந்த நுணுக்கங்களை நாம் தொடர்ந்து விளக்கம் கூறவேண்டி இருக்கின்றது. இதனால் சில விடையங்களை பற்றி பேசும் பொழுது, உணர்வுகளை வெளிபடுத்துவது கடினமாக இருக்கலாம். ஆனால், தமிழ் நண்பர்களுடன் பேசும் பொழுது இது ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை.
இதற்கு மேலாக, படிப்பிலும், வேலையிலும் அதிக நேரம் செலுத்துவதனால், நண்பர்களுடன் சந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. அர்த்தமுள்ள தொடர்புகளை வைத்திருப்பது கடினமாக உள்ளது. இதனால், வேலையிலிருந்து அல்லது பாடசாலையிலிருந்து விடுதலை வரும்பொழுது, நாம் தனிமையை அதிகமாக உணர்கிறோம்.
எனவே, இப்படிப்பட்ட பல விடயங்களினால், நாம் தனிமையிற்கு அடிமையாகிவிட்டோம். இந்த தனிமை தொற்றுநோய், எமக்கு ஒரு முன்னெச்சரிக்கையாக உதவுகிறது. நாம் மெது சாதாரண வாழ்கையிலிருந்து வெளிவந்து நண்பர்களுடன் இணைந்திருப்பதுற்கு சிறிது நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கவேண்டும். சில தமிழ் நண்பர்களை அமைப்பதற்காக முடிவு எடுக்க வேண்டும். இவற்றை செய்தால், நாம் ஒரு சமூகமாக இந்த நோயிலிருந்து வெளியேரலாம்.
அர்த்தமுள்ள நட்புகளை அமைத்து, புரிந்துணர்வு இருக்கும் நண்பர்களுடன் சேருங்கள். இது இந்த கடினமான மற்றும் சோர்வுற்ற வாழ்கையில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் தரும். நினைவு வைத்திருங்கள்; தனிமை என்பது உங்களை சுற்றி உள்ள மனிதர்களின் உடனிருப்பு இல்லாமை அல்ல. அர்த்தமுள்ள தொடர்புகளும், புரிந்துணர்வும் இல்லாமையே.