Arts
10 நிமிட வாசிப்பு

மாற்றத்திற்கு அஞ்சாதே

September 11, 2024 | பிரனேவ் கௌசிகன்

“பிரணேவ் ! பிரணேவ் ! எழும்புடா”. எனது புதுப் பாடசாலையுடைய முதல் நாள் இன்று. Serpell Primary School தான் என்னுடைய புதிய பாடசாலை.

நாங்கள் Perthல் 9 வருடங்கள் இருந்து விட்டு, Melbournற்கு வந்தோம். நான் அங்கே முதன் முதலாக உற்சாகத்துடனும், பதட்டத்துடனும், சந்தோசத்துடனும் பாடசாலை சென்றேன். எனது பழைய பாடசாலையின் பெயர் Excelsior Primary School. அது ஒரு பெரிய பாடசாலை. சுமார் 450 மாணவர்கள் படிக்கின்றனர். ளு Science lab, music room, oval மற்றும் art room போன்ற பல வசதிகள் இருந்தன. எனக்கு அங்கே பல நண்பர்கள் இருந்தனர். நாங்கள் சேர்ந்து soccer, footy மற்றும் two squares விளையாடுவோம்.

I was extremely smart in my class. பல பல சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வென்றிருக்கின்றேன்.

“பிரணேவ்! இன்னும் எழும்பவில்லையா? நேரம் போகுது” என்று அம்மாவின் சத்தத்துடன் எழும்பினேன். எனக்கு அதே உணர்வுகள். ஆனால் சந்தோசத்திற்குப் பதிலாகக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

 எப்படி வகுப்பிற்குச் செல்வது? எப்படி நண்பர்களை உருவாக்குவது? எங்கே உட்காருவது? என்ன விளையாடுவது? போன்ற பல கேள்விகளுடன் பாடசாலையுள் காலை வைத்தேன். இந்தப் பாடசாலை மிகப்பெரிய (massive) பாடசாலையாக இருந்தது. பெரிய Ovel. வெவ்வேறு வயதினருக்கு வெவ்வேறு மைதானங்கள் மற்றும் மாடிக்கட்டிடங்கள் என்பவற்றைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். அப்பத்தான் எனக்கு விளங்கியது, எனது பழைய பாடசாலை எறும்பைவிடச் சிறியது! என்னைப் போல பல மாணவர்கள் வந்துகொண்டு இருந்தனர். அவர்களுடைய சூரியன் போன்ற மஞ்சள் சட்டையும், ஆகாயம் போன்ற நீல காற்சட்டையும் மிக அழகாக இருந்தது. அது என்னைக் கவர்ந்துவிட்டது. எனது ஆசிரியர் என்னை என்னுடைய வகுப்பிற்கு அறிமுகப்படுத்தினார்.

எனக்குப் பக்கத்தில் உள்ள மாணவர்களுடன் கதைத்து நண்பர் ஆகினேன். அவர்கள் விளையாடும் டி basket ball மற்றும் marbles  எனக்குப் புதிதாக இருந்தது. ஆகையால் எனக்கு விளையாட முடியாமல் இருந்தது. இரண்டாவது நாளிலேயே “you don’t play well” என்று சொல்லித் துரத்திவிட்டார்கள். அந்த நாள் ஒரு மணி நேர இடைவேளையில் ஒருத்தரும் இல்லாமல், பள்ளியை சுற்றி நடந்தேன். அன்று வீட்டிற்கு வந்ததும், “அப்பா… அப்பா… எனக்கு ஒரு basket ballம் கொஞ்ச marblesம் வாங்கித் தாரிங்களோ?” என்று கேட்டேன். அதற்கு “கட்டாயம் வாங்கித் தாரன்” என்று அப்பா சொன்னார். நான் சந்தோசத்துடன் நானும் basketball  பழகி விளையாடலாம் என்று நினைக்கும் போது, அம்மா “இப்ப என்ன அவசரம்? வார இறுதியில் வாங்கித்தாரேன்” என்று குண்டைப் போட்டார். அப்பொழுது எனது உள்மனது புறுபுறுத்தது, “எனக்கு மட்டும்தானே அவசரம் விளங்கும்.” ஒவ்வொரு இரவும் basketball  கனவு வந்தது. கடைசியாக வார இறுதியும் வந்தது. பந்தும் கிடைத்தது. basketbal பயிற்சி எடுத்ததால் எனது நண்பர்கள் “You’re playing very well. Can you please join in our team” என்று கேட்டனர். நான் அவர்களுடன் சந்தோசமாக விளையாடினேன். எனது தனிமை என்னை விட்டு ஓடியது.

எனது பழைய பள்ளியில் music, library, science  என்பன ஆண்டு முழுவதும் படித்தேன். எனக்கு science  மிகவும்  பிடித்து இருந்தது. நான் science  ஆக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால் இங்கே ஒரு வருடத்தில் ஒரு குழுவிற்கு music  ஒரு குழுவிற்கு library   மற்றும் science  என்று மாறி மாறி வரும். எனக்கும் scienceக்கும் இருந்த தூரம் கூடிவிட்டது. எனது scientist  கனவும் மறைந்துவிட்டது. நான் அங்கே musicல் recorder பழகினேன். இங்கே ukele  பழகுகின்றேன். இங்கே வந்ததால் எனக்குப் புதிய skill  கிடைத்ததாக சந்தோசப்பட்டேன்.

எனது பழைய பள்ளியில் நான் மிகவும் திறமைசாலியாக இருந்தேன். எல்லாத்திலும் முதலிடம் பெற்றேன். நிறைய சான்றிதழ்களும் பரிசில்களும் கிடைத்தன. இங்கே வந்தபோதுதான் தெரிந்தது, என்னைவிட திறமையான மாணவர்கள் இருக்கின்றார்கள் என்று, அவர்கள் நிறைய பரிசில்களை பெற்றனர். எனக்கு அது மிகவும் கவலையாக இருந்தது. எனது இடத்தை யாரோ பறித்துவிட்டது போல் இருந்தது. அந்த இடம் எனக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பயமும் கவலையும் வந்தது. பல நாள் முயற்சி செய்து அந்த இடத்தை அடைந்து விட்டேன். I am one of the best students in my class now..

எனது புதிய பள்ளி இப்போது, பழைய பள்ளியாக மாறிவிட்டது. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். நான் best student ஆகிவிட்டேன். எனது பாடசாலை நாட்கள் மிகவும் சந்தோசமாக கழிகின்றது. எனது பாடசாலை எனக்கு மிகவும் பிடிக்கும்.

NEVER FEAR CHANGE

You will get what you want if you try hard.

பிரனேவ் கௌசிகன்


46 பார்வைகள்

About the Author

பிரனேவ் கௌசிகன்

3 Comments

  1. Sinthu says:

    Wow amazing Branev
    Congratulations ,you deserve it .
    Keep it up

  2. Suntharesan Vibeeshanth says:

    Wow it’s amazing keep going இன்னும் கனவுகாணுங்கள் சிறகடிக்கட்டும் உங்கள் கற்பனைகள் மின்னட்டும் எதிரகாலாம் வாழ்துக்கள்

  3. Janani says:

    Well written Braneev
    Excellent work 👍

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்