எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் […]
காலம் என்னும் சக்கரம் சுழன்றபடியே இருக்கின்றது. இம்மாற்றத்திற்கேற்ப இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது யாவரும் அறிந்த ஒன்றே. இம்மாற்றம் மனித வாழ்வையும் விட்டுவைக்கவில்லை. குடிசைகள்கோபுரங்களாகி விட்டன. வீட்டின் வாயிற்படி தாண்டி வெளியே வராமலிருந்த பெண்கள் பல துறைகளிலும் கல்வி கற்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இது பாராட்டப்படக் கூடிய விஷயமாகும். ஆணுக்குப் பெண் அடிமையாக வாழ்ந்த காலம் போய்விட்டது. இன்று ஆணும் பெண் ணும் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். இந்நிலை […]
பொதுவாக ஒரு சமூகத்தில் உளரீதியான பிரச்சனைகள் காணப்படுவது இயல்பு. அத்துடன் ஒரு சமூகம் பல வகையான துன்ப அனுபவங்களையும், இடர்பாடுகளையும் அனுபவித்திருக்குமேயானால் அந்தசமூகத்தில் பலருக்குப் பலவகையான மன அழுத்தங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பிரத்தியேகமாக ஒரு பெரும் போரையும் அந்த போரின் கொடூரத்தையும் அநேக காலம் அனுபவித்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தினுள் அநேகருக்குப் பல்வேறுபட்ட துன்ப அனுபவங்கள் பலவிதமான மன அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றது. அதேவேளையில் நமது சமூகத்தினுள் மனரீதியான பிரச்சனைகள் […]
நான் படித்த வகுப்பில் பரிமளாவும் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை இருந்தார் என்பதை தவிர எனக்கு பரிமளாவை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதற் குத் தேவையும் இருந்ததில்லை. ஆனால் இன்று மட்டும் என்ன தேவை வந்தது? ஏன் எனக்கு பரிமளா ஞாபகத்துக்கு வந்தாள்? இல்லல! ஞாபகத்திற்கு வரவழைத்தேன்! அவளின் முகம் எனக்கு இன்னமும் அதிகமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தமிழ் படங்களில் காண்பிக்கும் ஒரு ஏழைச் சிறுமியின் […]
ஒரு மாலை நேரம் வழமை போல என்னுடைய Facebook பார்த்துக்கொண்டிருக்கும் போது Harry Potter – Forbidden Forest Experience in Melbourne என்று ஒரு post வந்தது. என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்த பொழுது தான் ஜூலை மாதம் வரை Mount Marthaவில் உள்ள the Brias – community forestன் woodland நடைபாதையில் (walking trail) இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டேன். அந்த நடைபாதையில், […]
ஒரு மின்னஞ்சல், என் வாழ்வின் ஆழ்ந்த கடலில் நங்கூரமிட்டிருந்த நினைவலைகளை அசைத்தது. அதில் எங்கள் இயக்குநர்களில் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். நான் அவருடன் நெருக்கமாக வேலை செய்யும் ஒரு நபர்! நேற்றுக்கூட அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். முழு அலுவலகமும் அதிர்ச்சியில் உறைந்தது! என் னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! எல்லாராலும் எல்லாவற்றையும் வார்த்தைகளில் வடிப்பது கடினம். குறிப்பாக நம்மை ஆழமாகப் பாதிக்கும் கதைகள், மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளை வார்த்தைகளால் […]
யன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே எட்டிப் பார்க்கின்றாள் கோமதி. மகன் மத்தியானம் சாப்பிட வாறன் என்று சொன்னான் இன்னும் காணவில்லை. மிகவும் குளிரான காலம் மதியம் ஒரு மணியாகிவிட்டது. பொறுமையற்றவளாக அடிக்கடி எட்டிப்பார்ப்பதும் கதிரையில் இருப்பதுமாக இருந்தாள். கோடைகாலமாக இருந்தால் வெளியே போய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு நேரமும் போகுதில்லை. தொலைபேசியை எடுத்து முகநூலை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள். அதுவும் அலுத்துப் போகவே பழைய நினைவலைகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் […]
புதிய பரிமானம் “This is really good, but are you sure you want this for an Indian Concert”? மார்ச் மாத, 11 மணி காலை வெயிலில் பொட்டானிக்கல் கஃபேயில் ஸ்டராங் லாட்டேயை குடித்தபடி, John Cain அரங்கததில அமைக்கப்போகிற மேடை வரைபடத்தை லேப்டாப்பில் பார்த்து Lawry சந்தேகமாக கேட்டார். அதற்கு ஒரு மாதத்திற்கு முன் பிப்ரவரி மாதம், சிட்னியில் இருந்த வந் நண்பன் மே […]
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சமமானவை. விளையாட்டு வீரர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இயல்பாகவே இருக்கும். விளையாட்டால் விளையும் நன்மைகளைப்பற்றி இப்படி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். கடுமையாகப் போராடியபின் வென்றவர்களும் தோற்றவர்களும் நட்போடு கைலாகு கொடுத்துக் கடந்து போவதை நாம் அன்றாடம் காண்கிறோம். இந்த முதிர்ச்சி எப்போது ஒரு வீரரிடம் உருவாகிறது? இது விளையாட்டுத் திடலைத் தாண்டியும் நிலைத்திருக்குமா? மைதானத்தில் எமக்கு நாயகர்களாகத் தெரியும் வீரர்கள், அன்றாட வாழ்வில் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் வாழ்வின் […]