Arts
10 நிமிட வாசிப்பு

ஒரு நாள் POWER CUT

September 11, 2024 | வர்ஷனா ஜனந்தன்

இலங்கையில் பிறந்திருந்தாலும் இரண்டு மாதங்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து குடிபெயர்ந்து மத்திய கிழக்கு சென்று பின்னர் ஆஸ்திரேலியா வந்தடைந்தேன். அதனால் எனக்கு இலங்கை வாழ்க்கை முறை சரியாக தெரியாது, குறிப்பாக யாழ்ப்பாணக் கிராம வாழ்க்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் எனது அப்பா பிறந்த நாட்டில் அதிக தொடர்புகள் கொண்டவர். அவருக்கு சொந்த நாடே சொர்க்கம்.

எப்போதும் இலங்கை பற்றியும் தாம் வாழ்ந்த முறை பற்றியும் அடிக்கடி கூறிக் கொண்டேயிருப்பார். சில வேளைகளில் சலிப்பாக இருந்தாலும் அவரின் கதைகளை ஆர்வமாகக் கேட்டிருக்கின்றேன். வேண்டாம் என்றாலும் சொல்லி முடிக்காமல் நிறுத்த மாட்டார். அவர் சிறு வயதில் வாழ்ந்த வாழ்க்கை முறைகள், பாடசாலையில் கல்வி கற்ற முறைகள், நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய விளையாட்டுகள், அவர்களுக்கு இருந்த வசதிகள் என கேட்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரசியமாகவும் இருந்ததது. இப்படியெல்லாம் வாழமுடியுமா? என்ற கேள்விகளை நான் அடிக்கடி கேட்டிருப்பேன். அதை விட மின்சாரமே இல்லாமல் போர் சூழலில் வாழ்ந்த அனுபவங்கள் என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனையோ நாடுகளுக்குப் பயளம் செய்திருக்கிறார் பலதடவை. ஆனால் அப்பாவுக்கு அந்த யாழ்ப்பாண வாழ்க்கைதான் சொர்க்கம், ஆஸ்திரேலியா வாழ்க்கையும் சுத்தமாக பிடிக்காது. எனக்கு அது ஒரு அழகான கிராம வாழ்க்கை என்பது வடிவாகத் தெரிகிறது. விக்டோரியா கிராம வாழ்க்கை என்றாலும் கம்பளிக்குள்தான் வாழ்க்கை. எப்படி இருந்தாலும் என்னாலோ என் நண்பர்களாலோ இதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அது அப்பாக்கு ஒரு அழகிய நிலா காலம். அம்மா இலங்கை தலைநகரில் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவருக்கும் நிறைய சுவாரசியமான அனுபவங்கள் உண்டு

அப்பா பாடசாலை வாழ்க்கை பற்றி சொன்ன கதைகள் என்றால், பழுதான கட்டிட வகுப்பறைகளிலும் மர நிழலிலும் படித்ததும், வீட்டுப்பாடம் செய்யாமல் ஆசிரியரிடமிருந்து கடுமையான தண்டனை பெற்றதும், பென்சில் வாங்கினால் அது முழுமையாக தேயுமட்டும் பாவித்ததும், மை முடிந்த பேனாவை சுடு தண்ணியில் போட்டு முடிந்தவரை பாவித்ததும், உயவெநநெ இல் கல்பனிஷ் plain tea குடிச்சதும், கிணற்றிலே வாளியால் தண்ணீர் அள்ளி குடிச்சதும் என பல நம்பமுடியாத விடயங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனாலும் பாடசாலை நுழைவாயிலில் ராணுவத்திடம் சாப்பாட்டு பெட்டியை திறந்து காட்டிச் செல்ல வேண்டும் என்பது மிகவும் வேதனையாக உணர்ந்தேன். அப்பாவின் பாடசாலை Hartley College. போரால் முழுமையாக பாதிக்கப்பட்ட பாடசாலை ஆகும். Tuition கிளசில் அழெவைழச ஆக இருந்தபோது ஒரு மாணவன் சத்தம் போட்டதற்காக, தான் தென் னம் பாளையால் அடிவேண்டியதை சொல்லிச் சிரிப்பார். ஆனாலும் எமது பாடசாலை வாழ்வைவிட இலங்கைப் பாடசாலை வாழ்வு மிகவும் கட்டுக்கோப்பானது என்பதை உணர்கிறேன்.

நண்பர்களுடன் கோவிலடியிலும் குளத்தடியிலும் விளையாட்டு திடலிலும் இரவு வரை இருந்து கதைப்பதாக சொல்லுவார். அதனாலோ என்னவோ ஒவ்வொரு நாளும் மாலை கடுமையான சிரிப்பொலியுடன் பாடசாலை நண்பர்களுடன் வாட்ஸாப்பில் கதைப்பார். நாம் எங்கு சென்றாலும் அவருக்கு நண்பர்கள் உண்டு, தேடி வந்து உதவி செய்வார்கள். எல்லா இன நண்பர்களும். அவருக்கு நண்பர்கள் மிகமுக்கியம். தாங்க முடியாத பாசம், அப்பாடா. அது உண்மையில் பழழபடந உாயவ ஐ விட நல்ல விடயம்தான். எமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. தொழில்நுட்பம் உறவுகளை நலிவடைய செய்கிறது என்பதுதான் உண்மை.

அப்பா வீட்டில் வளங்கள் வீணடிப்பதை கடுமையாகக் கண்டிப்பார். நீரை கொஞ்சமாக வீணடித்தாலும் கோபப்படுவார். சூழலை நன்றாக நேசப்பவர். பனை மரம், அதன் பயன்கள் பற்றி நிறையவே கூறுவார். தேவையில்லாமல் டைபாவ எரிய விடமாட்டார். ஒவ்வொரு பென்சிலும் புத்தகத்தாளையும் கவனமாகப் பாவிக்கச் சொல்லுவார். சில வேளைகளில் அப் பாக் கும் அம்மாக்கும் இதனால் சண்டை கூட வரும். சில வேளைகளில் என்னடா இவர் இப்படி இருக்கிறார் என்று எண்ணத் தோன்றும் ஆனால் அவர் சொல்லுவது மிகவும் நியாயமானது. அவர்கள் வாழ்ந்த முறையும் அது. அதில் உண்மையும் உண்டு.

என்னதான் கஷ்டம் இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் வாழமுடியுமா அது எப்படி சாத்தியம் என்று என்னால் இன்றும் நம்ப முடியவில்லை. நாலு கரண்டி எண்ணை விளக்கிலே படித்தார்களாம். டிவி பார்க்க முடியாது. Mobile phone இல்லை, washing machine இல்லை, fridge இல்லை, சுடுநீர் இல்லை, கம்ப்யூட்டர் இல்லை. வெளியுலக தொடர்பு இல்லை. எப்படி இந்த வாழ்க்கை சாத்தியம்? அதனால் அவர்களுக்கு விளையாட்டும் படிப்பும் மட்டும் தான் வாழ்க்கையாக இருந்தது. இதனாலோ என்னவோ எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக் கூடியவராக இருக்கிறார். இந்த எல்லா கேள்விக்கும் பதிலை மெல்பெர்னின் இருநாள் power cut ஓரளவுக்கு பதிலைக் கொடுத்திருந்தது.

திடீர் என்று ஏற்பட்ட மின்துண்டிப்பு எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்ததை கொடுத்திருந்தது. மெழுகுதிரியும், அப்பா வைத்திருந்த சிறிய LED விளக்குகள் எமது வீட்டிற்கு வெளிச்சம் தந்தன. நான் பயந்தேன், ஆனால் மின் விளக்குகள்  இல்லாமல் தினசரி வேலைகளைச் செய்ய வேடிக்கையாக இருந்தது. அமைதியான சூழல் ஏற்பட்டது, புதிய அனுபவம். பார்க்க  youtubeம் இல்லை, டிவி இல்லை, ஒன்றும் இல்லை. வேறு வழியின்றி புத்தகம் எடுத்து படிக்கத் தொடங்கினேன். படிக் கப் படிக்க நன்றாக உணர்ந்தேன். மனம் ஒருநிலைப்பட்டது. எந்தவித சஞ்சலமும் இல்லை. கவனம் சிதறவில்லை. அற்புதமான உணர்வு. மின்சாரமற்ற மங்கிய ஒளியுலும் ஒரு அழகான வாழ்க்கை இருப்பதை உணர்ந்தேன். எனது அப்பாவின் குழந்தைப் பருவம் மற்றும் மின்சாரம் இல்லாத ஒரு தலைமுறையை அவர்கள் எப் படிக் கடந்தார்கள் என்பதையும் நான் இந்த மின்வெட்டின் மூலம் புரிந்து கொண்டேன். நாம் வாழும் வாழ்வும் அதன் நடைமுறையும் எம்மைச் சூழ உள்ளவற்றைப் பொறுத்தே அமைகின்றது. இதை நாம் காட்டு வாழ்க்கையில் இருந்து நகரவாழ்க்கை வரை அவதானிக்கலாம். வறுமை வாழ்க்கையில் இருந்து செல்வந்த வாழ்க்கை வரை அவதானிக்கலாம். கிடைக்காததை எண்ணி வருத்தப்படாமல் கிடைத்ததை கொண்டு சந்தோசமாக வாழ்வதே வாழ்க்கை என்பதே உண்மை. எமது பெற்றோரின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது, பல அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது.

மின்வெட்டின்போது மின்சாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டேன். அது இல்லாமல் வாழ்வது இன்றைய காலத்தில் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இன்றைய காலத்தில் மின்சாரமும் தொலைபேசியும் சுவாசிக்கும் உயிர் வாயு போன்றதாக மாறிவிட்டது. “Communication and electricity has become an oxygen for our life now.”. Mobile phone இல்லாமல் வாழவே முடியாது என்ற சூழ் நிலைக்கு எமது சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது.

நீங்கள் யோசிக்கலாம் இதை ஏன் நான் எழுதுகிறேன் என்று, நாம் எமது பெற்றோர் வாழ்ந்ததற்கு முற்றிலும் வித்தியாசாகமான வாழ்வைத்தான் இங்கு வாழ்கின்றோம். அவர்கள் இரண்டு வாழ்க்கை முறைகளையும் ஒப்பிட்டு பார்த்து குழப்பம் அடைவது நன்றாகத் தெரிகிறது. இது நாம் சிந்திக்க கூடிய ஒரு எனது அனுபவப் பகிர்வு.

வர்ஷனா ஜனந்தன்


21 பார்வைகள்

About the Author

வர்ஷனா ஜனந்தன்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்