Arts
10 நிமிட வாசிப்பு

Harry Potter Forbidden Forest

September 11, 2024 | சரணியா சத்தியன்

ஒரு மாலை நேரம் வழமை போல என்னுடைய Facebook பார்த்துக்கொண்டிருக்கும் போது Harry Potter – Forbidden Forest Experience in Melbourne என்று ஒரு post வந்தது. என்ன வித்தியாசமாக இருக்கிறதே என்று பார்த்த பொழுது தான் ஜூலை மாதம் வரை Mount Marthaவில் உள்ள the Brias – community forestன் woodland நடைபாதையில் (walking trail) இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டேன். அந்த நடைபாதையில், ஒலி, ஒளி, மற்றும் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் மூலம் forbidden forest (கதையில் வரும் காடு – கதையின் பல முக்கிய நிகழ்வுகள் இங்கு நடைபெறும்) அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைக்கப் பட்டிருப்பதாகவும் இரவில் மட்டுமே நடைபெறுவதாகவும் தெரிந்தது. அதைப் பார்த்ததும் மிகவும் உற்சாகமாக இருந்தது ஏனென்றல், நான் ஒரு பயங்கரமான Harry Potter fan. ஆனால் என்னுடைய உற்சாகம் எல்லாம் காற்று போன பலூன் மாதிரி ஒன்னுமே இல்லாமல் போய்விட்டது நுழைவுச்சீட்டு விலையை பார்த்ததும். யோசிச்சு பார்க்கும் போது என்னுை டய கணவனும் வாசிப்பும் ஆட்டிக்கும் அண்டாடிக்கும் மாதிரி. என்னுடைய மகளுக்கு இன்னும் Harry Potter தெரியாது. இரவு நேரம் என் றதால் தனிய போகவும் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. இந்தப் பழம் புளிக் கும் என்று என்னுடைய மனதை நானே சமாதானம் செய்துகொண்டேன். ஆனால் என்னுடைய நண்பியின் மகன் கடந்த 6 மாதமாக Harry Potter ஐ தீவிரமாக வாசித்தது ஞாபகம் வந்தது. சரி என்று என்னுடைய நண்பிக்கு அதை forward செய்து மகனை அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு நான் என்னுடைய வேலையை பார்க்கப் போய்விட்டேன்.

ஆனால் அடுத்தநாள் காலையிலேயே என்னுடைய நண்பியின் மகனிடமிருந்து எனக்கு ஒரு voice message. “சரணியா மாமி Harry Potterக்கு நீங்களும் வாங்கோ. அம்மா, அப்பாக்கு கதை தெரியாது. நீங்கள் வந்தா தான் கரெ ஆ இருக்கும். Please வாங்கோ” என்று. என்னுடைய அதிஷ்டமோ என்னவோ, எனது கணவனும் அருகிலிருந்து இதைக் கேட்டுவிட்டு “என்னத்தைப் பற்றிக் கதைக்கிறான் என்று கேட்க, நானும் விடயத்தைச் சொன்னேன். அவரும் “நாங்களும் மகளையும் கூட்டிக்கொண்டு போவம். அவன் இவ்வளவு கேக்கிறான். எங்களுக்கு ஒன்னும் தெரியாட்டிலும் மகள் அவங்களோட விளையாடலாம். அங்க பெரிசா ஒன்னும் இருக்காது. சும்மா ஒரு outing மாதிரி போகலாம்” என்று சொன்னார். உண்மைய சொல்லனும் என் றால் எனக்கும் அங்க எதுவும் பெரிசா இருக்காது என்ற எண்ணம் தான் வழமை போல 4 உருவச்சிலையை காட்டைச் சுற்றி வைத்திருப்பார்கள். ஒரு museum மாதிரி அந்த நடைபாதையைச் சுற்றி நடந்து பார்வையிடுவதாக இருக்கும் என்ற என்னுடைய எண்ணம் தான் முதலில் என்னுடைய ஆர்வத்தைத் தூண்டவில்லை. ஆனாலும் போகலாம் என்று எனது கணவன் சொன்னதும் எனக்குள் இருந்த அந்த Harry Potter fanக்கு ஒரே குத்தாட்டம் தான் பிறகு என்ன, எல்லோரும் கலந்து பேசி ஒரு வெள்ளிக்கிழமை இரவு 9 ​​மணிக்கு என்னுடைய Harry Potter பயணம் மனசு முழுக்க ஒரு குறுகுறுப்போட ஆரம்பித்தது.

Mount Marthaவிலிருந்த அந்த காட்டிற்குச் சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு, ஊழியர்களின் வழிக்காட்டலுடன் நிகழ்வு நடைபெறும் இடத்தை நோக்கி நடந்தோம். சுற்றிலும் இருட்டுதூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. அது தான் நிகழ்வு நடைபெறும் இடமென்று நினைத்துக்கொண்டேன். என்னைச் சுற்றிலும் பல இளைஞர்கள், சிறுவர்கள் Harry Potter கதாபாத்திரங்கள் போல ஆடை, தொப்பி, scarf எல்லாம் அணிந்து, fancy dress paradeக்கு வருவதைப்போல் வந்திருந்தனர். அதைப் பார்த்ததும் விநோதமாகவும், சிரிப்பாகவும், கொஞ்சம் ஆசையாகவும் இருந்தது. என்னுடைய பள்ளிக் காலத்தில் நாங்கள் ஒரு 4 நண்பர்கள் Harry Potterன் தீவிர ரசிகைகள். அவர்களுடன் வந்திருந்தால் நானும் இப்படித்தான் வந்திருப்பேனோ என்று தோன்றியது.

அங்கு நுழைவாயிலில் முதலில் இருந்தது உணவகங்கள் காத்திருப்போர் இடம் தான் ஆனால் நுழைந்ததுமே, என் மனதில் தோன்றியது என்னவோ “Oh my god! எப்படிடா???” என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான் கதையில் வரும் கடைத்தொகுதிகளை கண் முன்னே கொண்டுவந்திருந்தார்கள்.

மரப்பலகைகளாலான கடைகள், marshmallows சுடும் இடம், அந்த lighting, காதில் கேட்ட Harry Potter theme music கதையில் வந்த உணவு வகைகள் எல்லமே நான் நினைத்தது தவறு, இது ஒரு மாய உலகம் தான் என்று கட்டியம் கூறியது. வாயிலில் பெரிய பெயர் பலகை எல்லாம் வைக்காமல், projector மூலம் “Harry Potter Forbidden Forest Experience” என்று தரையில் ப்ரொஜெக்ட் செய்திருந்தார்கள். சுற்றிலும் சிவப்பு, செம்மஞ்சள் நிற ஒளிக்கலவைகள். அதிலும் ஒளி விளக்குகள் கூட காடுகளைப் போன்று தெரிவு செய்திருந்தமை எனது ஆர்வத்தைத் தூண்டியது. அங்கிருந்த உணவகங்களிலும் கதையில் குறிப்பிடப்பட்ட உணவுகளும் பாணங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதைக் கடந்து சென்று ஒரு நீண்ட வரிசையில் உள் நுழையக் காத்திருந்தோம். காத்திருந்த நேரத்தில் சிறுவர்களுடன் இணைந்து, கதையில் வரும் பிரசித்தமான butterbeer drink வாங்கிக் குடித்தது தனிக்கதை. அப்பொழுதே எனக்குள் இருந்த அந்தச் சிறுமி வெளிவரத் தொடங்கிவிட்டாள்.

உள்நுழைந்து, ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்க வைக்க ஒரு museum மாதிரித் தான் இருக்கும் என் ற என் நினைப்பை யாரோ செருப்பால் அடித்த மாதிரி இருந்தது. இதை இவ்வளவு interactive ஆக செய்யமுடியுமா? இவ்வளவு ஆச்சரியப்படுத்த முடியுமா? யாருடா இதை வடிவமைச்சது? எப்படிடா செய்திங்கள்? என்று பல கேள்விகள். Because it was simply magical. Lightingஆ அல்லது sound effectsஆ அல்லது படத்திலிருந்து எடுத்துக் கொண்ட வசனங்களா? எல்லாம் இணைந்து அந்த மாய உலகத்திற்குள்ளேயே கட்டி வைத்துவிட்டது.

அந்த காட்டிற்குள் நுழைகையிலேயே, எப்படி இவ்வளவு பொருத்தமாக ஒரு காட்டினை தெரிவு செய்தார்கள் என்ற ஆச்சரியம் தான் கதையில் கூறப்பட்டதைப் போலவே அந்தக் காடே அழகாக இருந்த அதே நேரம், மனதைச் சில்லிடச்செய்யும் விதமான பயத்தையும் விதைக்கக்கூடியதாக இருந்தது.

நடைபாதையில் முதலில் இருந்த நீல நிற மான் மனதைக் கவர்ந்தது என்றால், நடைபாதை முழுவதும் இருந்த ஒவ்வொரு மரங்களும் ஒளியூட்டப்பட்டு, நிறங்கள் மாறியவண் ணம் இருந்ததும், படத்தின் இசை ஒலித்துக் கொண்டிருந்ததும், புகையூட்டப்பட்டிருந்ததும் மனதில் கிலியை ஏற்படுத்தினாலும், அது செய்த மாயம் என்னவென்பது அங்கு எடுத்த புகைப்படத்தை மீளப் பார்த்தபோது புரிந்தது. மரங்களினூடு பொருத்தப்பட்ட செம்மஞ்சள் ஒளி தீப்பற்றிக் கொண்ட காட்டினுள் இருப்பது போல் புகைப்படத்தில் தெரிந்தது.

மரங்களின் கிளைகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ஆந்தைகளும், இருட்டினுள் ஒளிர்ந்த கண்களும், சமாதிகளும், Death eatersம் (கதாபாத்திரம்) உண்மையிலேயே Forbidden forestஇனுள் Harry Potterஉடன் நடந்து செல்வது போலொரு மாயத்தோற்றத்தினை ஏற்படுத்தியது.

Buckbeak (கதாபாத்திரம் – பறவை) நான் குனிந்த போது அதுவும் குனிந்ததாகட்டும், aragog (கதாபாத்திரம் – சிலந்தி) குகைக்குளிருந்து வெளிவந்ததாகட்டும், தூங்கிக்கொண்டிருந்த Grawp (கதாபாத்திரம் – ராட்சத மனிதன்) முன்னிருந்த மணியை அடித்ததும் கண் திறந்து பார்த்ததாகட்டும், devil’s snare என்ற சூரியஓளியினைப் பிடிக்காத மரம் வெளிச்சம் வந்ததும் சுருங்கியதாகட்டும், நான் ஒரு ளிநடட சொல்லி கையை நீட்டியதும் வண் ணம் மாறிய காளான்களாகட்டும் எல்லாமே just magical.

இதையெல்லாம் விட 2 காட்போட் உருவங்கள், lights, sound effects, கண்ணுக்குத் தெரியாத திரை மட்டும் வைத்து படத்தில் வந்த இரண்டு காட்சிகளை எப்படி தத்ரூபமாக மீளக் கண் முன் உருவாக்கினார்கள் என்று இன்றளவும் புரியவில்லை. மெய்சிலிர்த்த தருணம். ஆனால் அதன் தாக்கம் மட்டும் இன்னும் மனதைவிட்டு விலகவுமில்லை. அதிலும் expecto patronum (ஒரு மந்திரச் சொல்- சொன்னதும் ஒரு வெள்ளை ஒளியுடன் ஒரு மிருகம் தோன்றும்) எனக்கூறி கையில் தரப்பட்ட wand ஐ சுழற்றியதும் திரையில் முயல் தோன்றியதும் என்னுள் இருந்த ரசிகைச் சிறுமி துள்ளிக் குதித்த தருணம் தான் நானும் Harry Potter போன்று மந்திரவாதியான எண்ணம்.

நிகழ்வின் சிறப்பு என்னவென்றால் கதையை அறிந்த நான் இதனை பார்த்து எவ்வளவு வியப்படைந்தேனோ, அதே வியப்பையும், மாய உணர்வையும் கதையினைத் தெரியாத எனது கணவன், நண்பர்கள், ஏன் எனது 4 வயது மகள் உட்பட அனைவருக்கும் கடத்தி யிருக்கிறார்கள். அதுவே நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் சாலன

2 1/2 மணித்தியாலம் அந்தக் காட்டினை சுற்றிய தருணம் முழுவதும் மீண்டும் சிறுமியாகிய உணர்வு. அதிலும் நான் இதனை வாசித்து சுமார் 23 வருடங்கள் இருக்கும். அதனால் கதையும், பிரதான கதாப்பாத்திரங்களும் மனதிலிருந்தாலும் சிறிய விடயங்கள் பல மறந்துவிட்ட போதும் எனது நண்பியின் மகன் கேள்விகள் கேட்கும் போதும், பேசும்போதும், மறந்ததை வெளிக்காட்டாமல் எனது கெத்தை விடாமல் போராடிய தருணங்கள்.

உற்சாகம், சந்தோசம், சிறுபிள்ளைததனம், ஆச்சரியம் என்று அங்கிருந்த ஒவ்வொரு மணித் துளியும் பலவித உணர்வுகுவியல் தான்

அனைத்தும் பார்த்து முடித்து 12 மணி போல் எனது மகிழுந்தில் ஏறியதும் ஒரு திருப்தியான அமைதி. என்னுடைய பழைய ஞாபகங்களின் வரிசை. 6ம் ஆண்டு வரை நான் புத்தகங்கள் வாசிப் பதில் ஆர்வம் காட்டியதே இல்லை. Harry Potter தான் நினைவு தெரிந்து தன்னிச்சையாக நான் வாசித்த முதல் கதை. அது வரை புத்தகத்தின் வாசம் அறியாத சிறுமி தான் நான். Harry Potter ஐ எனக்கு அறிமுகப்படுத்தியது எனது நண்பி தான். தர்ஷினி… ஏன் வாசிப்பை, நூலகத்தை அறிமுகப்படுத்தியதே அவள் தான் அந்த நேரத்தில் Harry Potter புத்தகங்கள் எல்லாம் யானை விலை குதிரை விலை தான். அதனால் எந்த ஒரு புத்தகமும் நான் வாங்கவில்லை. தர்ஷினி தான் வாங்கவாள். அவள் வாசித்ததும், நானும் எனது 2 நண்பிகளும் சுழற்சிமுறையில் வாசிப்போம். நான் வாசிக்க ஆரம்பித்த போது 4 பாகங்கள் தான் வெளியாகி இருந்தது. ஒவ்வொரு பாகமும் வாசித்ததும் பள்ளியில் நாங்கள் நால்வரும் எமது அம்மாக்கள் சீரியல் பார்த்துவிட்டு பேசுவது போலவே ஐயோ ஏன் இப்படி ஆனது? வொல்டமோட் திரும்ப வந்துட்டானே இனி என்ன நடக்கும்? என்றெல்லாம் பேசி மாய்ந்தது ஞாபகம் வந்தது.

அப்பா ஒரு முறை எனது அண்ணனிடம் சொன்னதும் நினைவுக்கு வந்தது. சரணியா புத்தகம் எடுத்து Harry Potter கதை வாசிப்பாள், ஆனால் நான் அவள் வாசிக்கும் போது அவளிண்ட முகத்தில் கதையை வாசிப்பேன் என.; று. அவ்வளவு ஆழமாக புத்தகங்களினை வாசித்த காலமது. இப்படி வீட்டிற்கு வரும் வரை “ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே… “moment தான். ஏன் இதனை எழுத ஆரம்பித்த தருணம் முதல் இப்பொழுது வரை எனது முகத்திலிருந்த புன்னகை மறையவேயில்லை. அதனைக் கண்ணாடியில் பார்க்கும் பொழுது புரிகிறது வாசிப்பு சாதரணமானது அல்ல. அது ஒரு உணர்வு. வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் இழந்த ஒன்று வாசிப்பு. இந்த நிமிடம் எனக்குள் ஒரு சங்கல்பம் மீண்டும் வாசிக்க வேண்டும் என்று, எனது அப்பா எனது முகத்தில் கதையினை அறியும் வகையில் ஆழமாக, எனை மறந்து மீண்டும் வாசிக்க வேண்டும்.

சரணியா சத்தியன்


41 பார்வைகள்

About the Author

சரணியா சத்தியன்

One Comment

  1. Fawas says:

    Very perfectly narrated, Namkku nerla pona madiri experience, Check spelling on the last para

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்