
ராஜா கருப்பையா
புதிய வடிவில் வெளியாகியிருக்கும் அழகான இளவேனிலின் கலவையான,சுவையான கட்டுரைகளும்,கதைகளும் அட்டை to அட்டை ஒரே மூச்சில் வாசிக்கச் செய்தன. நம்பிக்கையூட்டும் ஆசிரியர் தலையங்கம், இளையோருக்கு ஊக்கமளிக்கும் அவர்தம் கட்டுரைகள், தைத்திருநாளின் தொன்மையை அறிந்து வியக்கச்செய்யும் சங்க இலக்கிய பாடல் சான்றுகளடங்கிய செறிவான பாடும்மீன் ஐயா அவர்களின் கட்டுரை, நாவில் சுவை ஏற்றும் ரகமத் அண்ணாவின் கேபாப் கதை, வண்ண பேதத்தை குழந்தைகளிடம் புகுத்தாதீர் என எடுத்து சொல்லும் கட்டுரை, இளையவருடனான கலந்துரையாடலில் அவர்களது உள்ளங்கள், கலாச்சார இடைவெளிகளில் சிக்கி வளர்ந்து வரும் குழப்ப பருவங்களைக் கூறும் முரண்பாடு கட்டுரை, அதன் தொடர்ச்சியாக mental health issues பற்றிய கட்டுரை, இன்றைய இளையோரின் வாழ்வினை உணர்த்தும் கட்டுரைகள், மாறுதலாக science fiction கதை, இளைய இசைக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் கட்டுரை, புரிந்துணர்வுடன் கூடிய நட்புணர்வு ஏன் முக்கியம் எனும் தனிமை கொடுமையை கூறும் கட்டுரை, உலகின் அத்தனை குடும்பங்களிலும் வந்து போகும் குடும்ப வன்முறை எங்கள் தமிழ் குடும்பங்களில் எவ்விதம் உள்ளது என சிந்திக்க செய்யும் கட்டுரை, இடப்பெயர்வு ஏற்பட்டாலும் Welcome Home என வரவேற்கும் ஆஸ்திரேலிய மண்ணின் கதை, அழகு தமிழ் கவிதையினை இரணிய நெஞ்சமாகத் தந்த கேதாவின் கவிதை, ear phones உலகத்தினை சிரித்து சிந்திக்க செய்யும் யாரோடுதான் கதை, பெண்ணின் வலியையும் வேதனையையும் வாஞ்சையோடு அதே சமயத்தில் கலக்கமும் ஊட்டிய என் வயிறு கதை, I know why some caged birds sing எனும் கவிதையின் கடைசி ஐந்து வரிகள் ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற அதிர்வு என பல்வேறு ஆழமான, சுவையான பதார்த்தங்களாக பார்த்து பார்த்துப் படைத்த பொங்கல் விருந்தே எங்கள் கைகளில் தவழும் இளவேனில் என்றால் அது நிச்சயம் மிகை அல்ல.
இப்படியான முன்னெடுப்புகளை, தேர்வினை செய்யும் ஆசிரியர் குழுவிற்கு மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்,
அன்புடன்,
ராஜா
Siyamala Sathiyasuthan
Firstly, I would like to express my gratitude to Casey Tamil Mandram for providing me with the opportunity to share my feedback.
Witnessing the evolution of Illavenil has been truly remarkable. This achievement is not an overnight success but the result of countless years of dedication by many individuals.
The morning after the Aadi Pirappu festival, as I sipped my coffee, I picked up the book. The captivating design and illustrations immediately drew me in, and from the very first article, I found myself unable to put it down. Despite my busy day, I stole moments to immerse myself in its pages, and by day’s end, I had completed it.
Reading Illavenil 2024 brought me immense satisfaction, reminding me of the joy I felt when I read books during my childhood. Growing up, I had an appetite for reading books of any genre, from Thillana Mohanambal to Mills and Boon. Unfortunately, at school, the library only had English books. I would eagerly borrow Tamil books from relatives and friends. I carried books everywhere I went — from the dining table to school, during breaks, and even to the restroom. However, over time, the demands of higher education, marriage, and raising children took precedence, and my reading habit took a backseat.
It wasn’t until recently, when I listened to the audiobook of Ponniyin Selvan entirely before watching the film, that my passion for literature was reignited. Illavenil 2024 marks the first physical book in years that I’ve enjoyed with the same enthusiasm I had as a child.
The book’s ability to consistently stimulate my curiosity and maintain my interest throughout each article was commendable. Each story offered insights that I could relate to, allowing me to appreciate the writer’s perspective even more.
In conclusion, Illavenil 2024 has not only awakened my love for reading but also reminded me of the impact books can have on one’s life. I eagerly anticipate more enriching reads like this in the future.
Below are some of my thoughts on the articles published:
Article 1:This piece of wisdom truly resonated with me. It validates the importance of selecting what’s best for your child. Just because others in the community follow one path doesn’t mean it’s the best for you and your child. It’s a powerful reminder to trust our instincts and make choices that align with our unique circumstances.
Article 2: My son will be attending a different school from his friends, and he’s understandably nervous about the change. This article offers such valuable insights. Sometimes, we, as parents, might overlook how significant seemingly simple things, like buying a basketball, can be in our child’s world. It reminds us to have regular, meaningful conversations with our children.
Article 3: This article reassured me that, despite appearances, kids are indeed listening to us. It’s heartening to know that second-generation kids are valuing the life they have here. It highlights the importance of leading by example and having faith in the values we impart.
Article 5:Kudos to the parents who allowed their child to write this article. Even though it doesn’t paint them in the best light, the freedom they’ve given their child to express openly and honestly is commendable. It takes courage to embrace such transparency.
Article 6: My heart goes out to Kousi. It must be incredibly challenging to stay calm and collected under such pressure. My son dreams of being a soccer player and puts in all the effort for it. Balancing his ambitions with academic responsibilities is a constant struggle. This article echoed my sentiments about supporting our children’s dreams while ensuring a safe path for their future.
Article 7: For some reason, I couldn’t read this article about a musical program by Indian artist. Perhaps my interests lie elsewhere.
Article 9: I admired Kannama’s courage. She’s an unusual and inspiring character for an older woman in our community. I hope to have her strength and resilience when I’m her age.
Article 10: Though I’m not a Harry Potter fan, the description was so captivating that it made me want to watch the movie. No matter our age, certain things can awaken our inner child and fill us with wonder.
Article 12:This piece reminded me of my social studies teacher from school. She was tough on us, and we used to think it was because she wasn’t married. The final message made me reflect on the importance of supporting kids in need and the lasting impact teachers can have on their students’ lives.
Article 14: It’s all about expectations. Parents have their own set of expectations for how their children should treat them, and the same goes for children towards their parents. This article leans towards the parents’ perspective, a common stance in our society, but it made me ponder the dynamics of familial relationships.
Article 15: This story was light-hearted and funny, depicting characters we’ve all encountered at some point. The sister and brother’s behaviours were described in such a relatable and amusing way that it was a joy to read.
Article 16: I’m not very proficient at understanding poetry, but this one was clear and concise. It resonated with the idea that we often get caught up in everything around us and forget to celebrate what we have beside us. It was a beautiful reminder to cherish the present
இரகமத்துல்லா
அன்பார்ந்த இளவேனில் ஆசிரியர் குழுவுக்கும், இளவேனில் இதழ் 26 ன் படைப்பாளிகளுக்கும் என் வணக்கங்கள். இளவேனில் இதழ் 26 ஐ வாசித்தேன். அந்த வாசிப்பில் எனக்கு தோன்றிய சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த விமர்சன மடலை அனுப்புகிறேன். இதில் சொல்லப்பட்டிருப்பது என்னுடைய சொந்த கருத்துகளும் விமர்சனங்கள் மட்டுமே.
முதலில் “பாராட்டுகளில்” இருந்து ஆரம்பிப்போம் 😊.
“என் பாட சாலை, என் தெரிவு”, “மாற்றத்திற்கு அஞ்சாதே”, “ஒரு நாள் Power Cut ” – இந்த மூன்று ஆக்கங்களிலும் படைப்பாளியின் அனுபவம் திறம்பட வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிலும், தெள்ளத் தெளிவாக மிக மிக இளம் வயதினரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் என்று அடையாளம் காண முடிகிற அளவுக்கு அவற்றில் உள்ள கருத்துகள் எளிமையாக இருக்கின்றன. இளம் சமுதாயத்தின் மனநிலை என்ன என்று புரியாமல் திரியும் “பெருசுகளுக்கு” இவை மிகுந்த நம்பிக்கையை தர வல்லது.
“மாற்றத்திற்கு அஞ்சாதே” படைப்பில் அரசுப் பள்ளியில் இருந்து தனியார் பள்ளிக்கு மாறி வரும் இளம் வயதினரின் transition ஐ மிக அழகாக சொல்லி இருப்பது சிறப்பு. முக்கியமாக “மாற்றத்திற்கு அஞ்சாதே” அளித்த பிரணவ்வின் இறுதி பஞ்ச் அலாதி:
//
NEVER FEAR CHANGE
You will get what you want if you try hard.
//
“ஒரு நாள் Power Cut”, 40, 50 ஆண்டுகளுக்கு முன்னர் நம் பெற்றோரும், (ஏன் நானுமே!) வளர்ந்த, வாழ்ந்த வாழ்வுமுறை, கல்வி பயின்ற முறை மற்றும் அன்றாட வாழ்வியலை தன் தந்தையின் வாய்மொழி கேட்டுணர்ந்த மகளின் எழுத்தாக அழகாக தரப்பட்டிருக்கிறது. மாதத்துக்கு ஒரு முறை “மின் துண்டிப்பு” இருந்தால், இன்றைய தலைமுறை சில நல்ல விசயங்களை கற்றுக் கொள்ள நல்ல வாய்ப்பு இருப்பதாகவே படுகிறது.
சிறார்களின் படைப்புகளின் தாக்கம், பிற அழுத்தமான படைப்புகளின் நடுவில் மனதுக்கு இதம் தந்த பாலாவின் “தமிழ்த் திரை இசைக்கச்சேரி”, சரண்யாவின் “Harry Potter Forbidden Forest”, கேதாவின் “விளையாட்டுப் புத்தி” மற்றும் ஜேகேவின் “பிள்ளை” பெரிய ஆறுதலாக அமைந்தன.
எனக்கு மிகவும் பிடித்த படைப்பாக நான் குறிப்பிடும் ஒன்று, இமாம் அவர்களின் “பரிமளாவும் Daniel ம்”. பள்ளி, கல்லூரி, வேலையிடம்… ஏன்… வீட்டிலும், வெளியிடங்களிலும் நாம் சந்திக்கும் நண்பர்கள், மனிதர்களின் திறமைக்குறைவை எள்ளி நகையாடாமல், அவர்களை ஊக்கப்படுத்தி, கை பிடித்து வழி நடத்த வேண்டியதன் அவசியத்தை மிக அழகாக, எளிமையாக எடுத்துரைத்தமைக்கு எனது பாராட்டுகள்.
அடுத்து, எனக்கு எதிர்மறையாக தோன்றிய சில கருத்துகள்:
மனதுக்கு உற்சாகமும், ஊக்கமும் தரும் ஏனைய படைப்புகளுக்கு இடையே, அவற்றிற்கு நேர் எதிரான கருத்துகளை சொல்லும் “ஏக்கம்”, “நினைவலைகள்”, “மாற்றம் ஒன்றே மாறாதது” மற்றும் “ஒப்பிட்டு உழல் நெஞ்சம்” போன்ற படைப்புகள் சிறுவயது படைப்பாளிகளின் கருத்துக்குப் புறம்பாக இருந்ததாகவே எனக்குத் தோன்றியது.
மேற்கூறிய படைப்புகளில் உள்ள கருத்துகளில் தவறில்லை. ஆனால், இவை தனித்து வேறு பதிப்புகளில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்படி கலவையாக, நேர்மறை படைப்புகள் இருக்கும்போது, அதுவும் இளம் படைப்பாளிகளின் நடுவே இவை வந்ததுதான் சற்று இடறுகிறது.
ஆசிரியர் குழு இத்தகைய வேறுபாடுகள் இல்லாமல் சிறப்பாக ஒரு பதிப்பை அளிக்குமாறு வேண்டிக் கொண்டு, என் மடலை முடிக்கிறேன். நன்றி.
நிர்மலதாஸ்
அரசு-தனியார் பாடசாலைகளைப் பற்றிய நிகழ்வு போன்ற உரையாடல்கள் மூலம் எமது தலைமுறைகளிற்கிடையிலான புரிந்துணர்வுகள் விருத்திபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதால் இது வரவேற்கப்படவேண்டிய முயற்சி.