Bridge The Gap கார்த்திகை 25ம் திகதி கேசி தமிழ் மன்றம் “Bridge the Gap” என்ற ஒரு இளையோர் சந்திப்பைத் தயார்ப்படுத்தியிருந்தது. அன்று சமுதாயத்தில் பேச விருப்பப்படாத தலைப்புகளைப் பற்றிய எமது அபிப்பிராயங்களும், 40-45 வயதைக்கொண்ட சில மூத்தவர்களின் அபிப்பிராயங்களையும் கலந்துரையாடினோம். அத்துடன் எமக்குப் பிடித்த விடையங்களைப் பற்றியும் கதைத்திருந்தோம். இதனால் தலைமுறை வித்தியாசங்களையும், ஒற்றுமைகளையும் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. அவற்றில் சில சர்ச்சைக்குரிய தலைப்புகளைப் பற்றிய எனது […]
மனிதச் சலனேமயற்ற அடர்காடு. நடுச்சாமம். மழை ”ஓ” என்று அலறிக் கொட்டிக்கொண்டிருந்தது. இராட்சத இடி முழக்கங்களின் சத்தத்திற்குப் பயந்து சிங்கக் கூட்டங்கள் எல்லாம் குகைகளுக்குள் சென்று பதுங்கியிருந்தன. யானைகள் பிளிறின. வௌவால்கள் எல்லாம் அச்சத்தில் அலறி அடித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன. அப்போது வானத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு பெரு மின்னல் தோன்றி மொத்தக் காட்டையும் வெளிச்சம் போட்டுக்காட்டியது. “அவ்வ்வ்வ்..” என்று பயத்தில் அலறினார் வடிேவலு. அருகிலிருந்த விஜய் அவரின் வாயை […]
நாம் வாழும் சமுதாயம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது. நவீனமயமாக்கத்தினால் மருத்துவம், விஞ்ஞானம், அன்றாட வாழ்க்கைமுறைகள் போன்றவை மாறிக்கொண்டு வருகின்றன. இப்பட்டியலில் குழந்தை வளர்ப்பும் இருக்கிறது. குழந்தை வளர்ப்பு ஒரு மனிதனுடைய வாழ்வில் மிக மிக முக்கியமான விடயமாகும். ஒரு மனிதனது ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் அனைத்தும் தனது பெற்றோர்களது வளர்ப்பிலிருந்து தெரிகிறது. எனவே பிள்ளை வளர்ப்பு காலத்தின் வளர்ச்சியால் எப்படி மாறியுள்ளது என்பதைப் பார்ப்போம். கடந்த காலம் என்னைப்போன்ற […]