Ilavenil

வாசகர் கடிதங்கள்

10 நிமிட வாசிப்பு | 41 பார்வைகள்
February 6, 2025 | Ilavenil

ராஜா கருப்பையாபுதிய வடிவில் வெளியாகியிருக்கும் அழகான இளவேனிலின் கலவையான,சுவையான கட்டுரைகளும்,கதைகளும் அட்டை to அட்டை ஒரே மூச்சில் வாசிக்கச் செய்தன. நம்பிக்கையூட்டும் ஆசிரியர் தலையங்கம், இளையோருக்கு ஊக்கமளிக்கும் அவர்தம் கட்டுரைகள், தைத்திருநாளின் தொன்மையை அறிந்து வியக்கச்செய்யும் சங்க இலக்கிய பாடல் சான்றுகளடங்கிய செறிவான பாடும்மீன் ஐயா அவர்களின் கட்டுரை, நாவில் சுவை ஏற்றும் ரகமத் அண்ணாவின் கேபாப் கதை, வண்ண பேதத்தை குழந்தைகளிடம் புகுத்தாதீர் என எடுத்து சொல்லும் கட்டுரை, […]

மேலும் பார்க்க

தொழில் முனைவோர் கருத்தமர்வு

10 நிமிட வாசிப்பு | 25 பார்வைகள்
February 6, 2025 | Ilavenil

இளவேனில் இதழ் 26 இன் வாசகர் அனுபவப் பகிர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் சஞ்சிகை பற்றிய உரையாடலைத் தொடர்ந்து அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமூகத்தில் தொழில் முனைவாளர்கள் எனும் தொனிப்பொருளில் சிறப்புக் கருத்தமர்வொன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் Capital Blinds நிறுவனத்தின் அகிலன், மதுரம் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மி விஷ்வா, பல்கலைக்கழக மாணவன் ஆரூரன் மற்றும் Better Dental Care நிறுவனத்தின் தாமரை மதியழகன் ஆகியோர் பங்கேற்றனர். […]

மேலும் பார்க்க

உணவே மருத்துவம்

10 நிமிட வாசிப்பு | 23 பார்வைகள்
February 6, 2025 | Ilavenil

மருத்துவர் கு. சிவராமனுடனான நேர்காணல்.இளவேனிலுக்காக நேர்காணலைச்  செயதவர்கள்  சாந்தி சிவகுமார், கலா பாலசண்முகன் பரந்து விரிந்த தமிழ் சமுதாயத்திற்கு சித்த மருத்துவர் கு. சிவராமனைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.  கு. சிவராமன், தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர். அவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி பின் புத்தகமாகவெளிவந்த ‘ஆறாம் திணை’ என்ற தொடர், உணவே நோயும் மருந்துமாகும் […]

மேலும் பார்க்க

மெய்ப்பொருள் காண்பது அறிவு

10 நிமிட வாசிப்பு | 26 பார்வைகள்
February 6, 2025 | Ilavenil

-இளவேனில் ஆசியர் குழு-  பேரன்புக்குரிய வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். தைமாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் மாதம். விடுமுறையில் களித்திருந்து, புதுவருடத்திற்கான உறுதிமொழிகளை எடுத்து, இந்தவருடம் இனிய வருடம் என்று நம்பிக்கையோடு தொடங்கும் புத்தூக்கக் காலத்தில் இளவேனிலினின் இருபத்தியேழாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.   அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமுகத்தின் குரலாக இளவேனில் இம்முறையும் எல்லா வயதினரதும் ஆக்கங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது. ஆக்கங்களை மக்களிடையே […]

மேலும் பார்க்க

ஏக்கம்

10 நிமிட வாசிப்பு | 60 பார்வைகள்
September 11, 2024 | Ilavenil

யன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி வெளியே எட்டிப் பார்க்கின்றாள் கோமதி. மகன் மத்தியானம் சாப்பிட வாறன் என்று சொன்னான் இன்னும் காணவில்லை. மிகவும் குளிரான காலம் மதியம் ஒரு மணியாகிவிட்டது. பொறுமையற்றவளாக அடிக்கடி எட்டிப்பார்ப்பதும் கதிரையில் இருப்பதுமாக இருந்தாள். கோடைகாலமாக இருந்தால் வெளியே போய்ப் பார்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு நேரமும் போகுதில்லை. தொலைபேசியை எடுத்து முகநூலை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தாள். அதுவும் அலுத்துப் போகவே பழைய நினைவலைகள் அவளைப் பின்னோக்கி இழுத்துச் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்