நான் படித்த வகுப்பில் பரிமளாவும் 8-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை இருந்தார் என்பதை தவிர எனக்கு பரிமளாவை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதற் குத் தேவையும் இருந்ததில்லை. ஆனால் இன்று மட்டும் என்ன தேவை வந்தது? ஏன் எனக்கு பரிமளா ஞாபகத்துக்கு வந்தாள்? இல்லல! ஞாபகத்திற்கு வரவழைத்தேன்! அவளின் முகம் எனக்கு இன்னமும் அதிகமாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆனால் தமிழ் படங்களில் காண்பிக்கும் ஒரு ஏழைச் சிறுமியின் […]
இறுதியாக அந்த நாள் வந்தது. விடியற் காலை நானும் அப்பாவும் அம்மாவிடம் விடை பெற்று ஸ்ரீநகர் செல்லும் 7 மணி ரயிலைப் பிடிப்பதற்காக ஆயத்தமானோம். அப்பா முன் சீட்டில் டிரைவர் அங்கிளுக்குப் பக்கத்திலும், நான் பின்னாலும் அமர்ந்தோம். நான் திரும்பி அம்மாவை ஒருமுறை கார் கண்ணாடியூடாகப் பார்த்து கை அசைத்தேன். ஆனால் முன் இருக்கையில் இருந்த என் தந்தையின் தலை அம்மாவைப் பார்க்கத் திரும்பவில்லை. நிமிர்ந்து அமர்ந்திருந்தார். திரும்பி என்னைப் […]