அவள் தன்னை ஒரு மரமென்று நினைத்திருந்தாள் சொந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து புதிய நிலத்தில் மீண்டும் வேரூன்றி அந்த நிலத்து விருட்சங்களின் விதானங்களை அண்ணாந்து பார்த்தபடி அவற்றின் விசால நிழல்களைத் தாண்டி சுயமாய் வளரத் துடிக்கும் ஒரு மரமென்று தன்னை நினைத்திருந்தாள் “நான் மரமல்ல” அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் “நான் ஒரு முறிந்த கிளை.” சொந்த நிலத்தைவிட்டு நெடுந்தொலைவில் வந்தடையாத அந்தக் கரையொன்றைத் தேடிக்கொண்டு சமுத்திர அலைகளின் மேல் மிதக்கின்ற மரக்கிளை […]