சிட்னியின் கோடைக் காலத்திலே அதிகாலை கலா வீட்டு விறாந்தையிலே அமர்ந்திருந்தாள். இளமஞ்சள் வெய்யில் இதமான உஷ்ணத்தைப் பரப்பியது. முற்றத்துச் செடிகள் மலர்ந்து அழகு காட்ட, அருகிலிருந்த மல்லிகை மணம் கலாவிற்கு ஒரு வித மயக்கத்தை ஊட்டியது. 76 வயது நிரம்பிய அவள் கடந்த ஒரு வருடமாக மகனுடன் வாழ்ந்து வருகிறாள். கலா எத்தனை வயதைத் தாண்டியும் அவள் தன்னை ஒரு மூதாட்டியாகக் கருதியது கிடையாது. ஆனால் அவள் அதை அங்கீகரிக்கிறாளோ […]