கேதா

ஒப்பிட்டு உழல் நெஞ்சம்

10 நிமிட வாசிப்பு | 47 பார்வைகள்
September 11, 2024 | கேதா

மானுடராய்க் கூர்ப்படைந்த உயிர்கட்கெல்லாம் மனதுக்குள் மந்திக் குணம் மாறாதுண்டு கடல் தாண்டித் தொலைதூரம் வந்தால் கூட அதைக் கவனமாகக் காவுகிறார் காலந்தோறும் போகின்ற இடம்தன்னை புரிந்திடாமல் போகின்ற நோக்கமதும் புலப் படாமல் பேய் என்ன செய்வதென்றும் முடிவில்லாமல் புகுவார் பின் புகுவதையே தொழிலாய்ச் செய்வார் நிலைகொள்ளா மனதோடு நிதமும் வாடி நடைபோடும் வழி எழிலை நயந்திடாமல் நாளைக்கு என்ன என்றே நடுக்கமுற்று நற்கணங்கள் நாள்தோறும் தொலைக்கின்றாரே தமக்கென்ன வேண்டுமென்ற முடிவை […]

மேலும் பார்க்க

விளையாட்டுப் புத்தி

10 நிமிட வாசிப்பு | 43 பார்வைகள்
September 11, 2024 | கேதா

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சமமானவை. விளையாட்டு வீரர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இயல்பாகவே இருக்கும். விளையாட்டால் விளையும் நன்மைகளைப்பற்றி இப்படி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். கடுமையாகப் போராடியபின் வென்றவர்களும் தோற்றவர்களும் நட்போடு கைலாகு கொடுத்துக் கடந்து போவதை நாம் அன்றாடம் காண்கிறோம். இந்த முதிர்ச்சி எப்போது ஒரு வீரரிடம் உருவாகிறது? இது விளையாட்டுத் திடலைத் தாண்டியும் நிலைத்திருக்குமா? மைதானத்தில் எமக்கு நாயகர்களாகத் தெரியும் வீரர்கள், அன்றாட வாழ்வில் எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் வாழ்வின் […]

மேலும் பார்க்க

இரணிய நெஞ்சம்

10 நிமிட வாசிப்பு | 87 பார்வைகள்
February 25, 2024 | கேதா

மூவுலகும் வென்று முடிவிலாப் புகழ் கண்டு ஈடெனக்கு யார் இனி என்று இறுமாந்து அகிலமெல்லாம் ஆள்வதற்காய் தான் வென்ற அரியணையில் வந்தமர்ந்தான் திதி மைந்தன் நெஞ்சினினிலே நிறைவில்லை நித்திரையும் வரவில்லை சொர்க்கம் அவன் காலடியில் சொந்தமெனக் கிடந்தாலும் சுகித்து மயங்கிட சுவை எதிலும் நாட்டமில்லை இமயத்தைப் பெயர்த்தவனின் இதயத்தில் இன்பமில்லை இத்தனைக்கும் காரணம் யார்? எதிரியென்று யாருமில்லை. இந்திரனோ இவன் அடிமை தேவர்களோ சேவகர்கள். கண்ணசைத்தால் போதும் களம் வெல்லும் […]

மேலும் பார்க்க

இல்லத்தரசு

10 நிமிட வாசிப்பு | 41 பார்வைகள்
February 24, 2024 | கேதா

பிள்ளைப் பருவத்தில் பெரியவராய் ஆனபின்னர் வெல்லப் பல களங்கள் காத்திருக்கும் என்று சொல்லிப் பள்ளியிலே பயின்ற பாடங்கள் ஏதினிலும் பக்குவமாய்க் கற்றுத் தெளியாத களமொன்று காணீரோ ஏட்டின் அறிவும் இணைந்த பல திறன்களும் நயந்து நாம் வளர்த்த நாட்டமும்-நாளும் முயன்று தெளிந்த முதல் ஞானத் தத்துவமும் இணைந்தாலும் போதாது இவ்வரசை ஆண்டுவிட எல்லோரும் ஆள்வதற்கு இருக்கின்ற ஓரரசு கற்காலம் முதற்கொண்டு தொடர்கின்ற பேரரசு குடிமக்கள் முடிமக்கள் யாவர்க்கும் பொது அரசு […]

மேலும் பார்க்க

சிறுவர்களின் பார்வையில் பொன்னியின் செல்வன் பாத்திரங்கள் 

10 நிமிட வாசிப்பு | 47 பார்வைகள்
February 24, 2024 | கேதா

பொன்னியின் செல்வன் நாவல் எழுபது ஆண்டுகளாகப் பல தலைமுறைகளைத் தாண்டி, இன்னமும் கொண்டாடப்படும் நாவலாக இருந்துவருகிறது. ஆரமப்த்தில் தொடராக வெளிவந்து, பின்னர் நாவல், மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் மற்றும் ஒலிப்புத்தகம்  என்று பல்வேறு ஊடக வடிவங்களைப் பெற்று மக்களைச் சென்றடைந்து வருகிறது. நாவலின் பாத்திரங்கள் தனித்துவமான குண இயல்புகளோடு மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் வாசகர்கள் இந்தப் பாத்திரங்களின் இரசிகர்களாக மாறி, யார் பெரியவர் என்று வாதம் செய்யும் […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்