கண்ணாடி முன் நின்று சேலை மடிப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொண்டேன். ச்ச…இந்த வயிறு மட்டும் இல்லைனா இன்னும் நல்லா இருக்கும். எரிச்சலாக வந்தது. என்ன பண்ணாலும் இது மட்டும் குறைய மாட்டேங்குது. எப்ப சேலை கட்டினாலும் வயிற்றை கரித்துக்கொட்டுவதையும் சேலை மடிப்புகள் உள்வாங்கி மறைத்துக்கொள்ளும். இப்படி, சேலை கட்டும் ஒரு நாளில் எனக்கே என் வயிற்றின் மீது கரிசனம் உண்டானது. ஏன் எப்பவும் இப்படி திட்டிக்கொண்டே இருக்கேன். […]
காலையில் ஒன்பதரை மணிக்கெல்லாம் கோர்ட்டில் இருக்கவேண்டும். பரபரவென்று கிளம்பிக்கொண்டிருந்தோம். அவரும் கூட வருகிறார் என்பதால் ஒரு தெம்பு உள்ளது என்றாலும் காவல் நிலையம், கோர்ட் எனும்போது சிறு படபடப்பும் எப்படியோ சேர்ந்துவிடுகிறது. நீதிபதி முன் நிற்கப்போவதால் என்ன உடை உடுப்பது? உடையை வைத்து நம்மை கணிப்பார்களோ என்ற கேள்வி எழுந்தது. ஸ்மார்ட் காசுவல்தான் (smart casual) நல்லது. முன்ன பின்ன செத்திருந்தாதான சுடுகாடு தெரியும். இந்தியாவிலும் சரி, ஆஸ்திரேலியாவிலும் சரி […]
எங்கள் வீட்டு முன்றிலில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு குருவிகள் கூடு கட்டும். தேடித் தேடி தும்பும் தடிகளும் கொண்டுவந்து கூட்டை அமைக்கும். பெண் குருவி முட்டையிட்டு அடை காக்கும்போது ஆண் உணவு தேடிக்கொண்டுவரும். குஞ்சுகள் பொரித்தபின்னர் இரண்டு குருவிகளுமே அலைந்து திரிந்து உணவு தெரிந்து வந்து குஞ்சுகளுக்குப் பரிந்து ஊட்டும். பிறகு பறக்கச் சொல்லிக் கொடுக்கும். பின்னர் ஒரு நாள் குஞ்சுகள் தங்கள் கூட்டை விட்டுப் பறந்தே போய்விடும். திரும்பி […]