எனக்குச் சிறு வயதிலிருந்தே எனது பாட்டா பாட்டியுடன் சேர்ந்து வாழும் மிகவும் அருமையான அனுபவத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. விரைவில் மாறிவரும் எமது நவீன உலகில் இப்படிப்பட்ட ஒரு அரிய அனுபவத்தைப் பெற்றது எனக்குக் கிடைத்த வரம் என்றே கூறுவேன். சமயங்களில் சில தவிர்க்கமுடியாத சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து சென்ற இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது என்றே கூறுவேன். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எமது முன்னோர்கள் […]