இன்று எனக்கு ஒரு நல்ல சந்தோசமான நாளாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். நான் இன்று ஒரு அழகான பூங்காவிற்கு போகப் போகிறேன். நான் எனது பூனை றுசியை என்னுடன் கொண்டு போகிறேன். “மாலாக் குட்டி…. மாலாக் குட்டி… எழும்புங்கோ. நாங்கள் இப்ப வெளிக்கிட வேணும்” என அம்மா என்னைக் கூப்பிட்டார். அப்போது நான் உடுப்பு மாற்றி, பல் துலக்கி, எல்லாம் செய்த பிறகு நாங்கள் காரில் ஏறிப் போனோம். […]