“பிரணேவ் ! பிரணேவ் ! எழும்புடா”. எனது புதுப் பாடசாலையுடைய முதல் நாள் இன்று. Serpell Primary School தான் என்னுடைய புதிய பாடசாலை. நாங்கள் Perthல் 9 வருடங்கள் இருந்து விட்டு, Melbournற்கு வந்தோம். நான் அங்கே முதன் முதலாக உற்சாகத்துடனும், பதட்டத்துடனும், சந்தோசத்துடனும் பாடசாலை சென்றேன். எனது பழைய பாடசாலையின் பெயர் Excelsior Primary School. அது ஒரு பெரிய பாடசாலை. சுமார் 450 மாணவர்கள் படிக்கின்றனர். […]