கூண்டுக்குள் சிக்கிய பறவைகள் நாம். சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழும் நாம், எம் ஆசைகளையும் விருப்பங்களையும் முன்னிலையில் வைத்திருக்கவேண்டும். பாடசாலை, பல்கலைக்கழகம், வேலைத் துறைகள் என்று வாழ்க்கை முழுவதும் எதிர்பார்ப்புகளே! எதிர்பார்ப்புகளிற்குள் சிக்கித் தவிப்பது இளைஞர்கள்தான். முதற்பரிசு, வைத்தியர், நல்ல வேலை, என்று சமுதாயம் வழிவகுத்துள்ள வாழ்க்கையை நோக்கிச் செல்லும் இளைஞர்கள், சந்தோசத்தை இழந்து மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் சந்தோசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கிணற்றுத் தவளைபோல் பெற்றோர்களின் மற்றும் […]