“புலம்பெயர் நாடுகளில் தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்படுமா?” “செம்மொழியான தமிழ் மற்றய செம்மொழிகள் போலல்லாது இன்றும் அழியாது நிலைத்திருப்பது எப்படி ?” இவை சில வருடங்களுக்கு முன்பு என் பிள்ளைகள் தமிழை VCE பாடமாக படித்தபோது பரீட்சைக்கு எடுத்த ஆராய்ச்சித் தலைப்புகள் . இந்த ஆராய்ச்சிகள், தமிழ் இரண்டாம் தலைமுறைக்கு மட்டுமல்ல மூன்றாம் தலைமுறைக்கும் எடுத்துச்செல்லப்படும் என்பது உறுதி என்றும், செம்மொழியான தமிழ் எப்படி இவ்வளவு காலமும் அழியாமல் இருந்ததோ […]
Melbourne’s First Ever Tamil Trivia Night – MATS X CTMY Kelvikku Padhil is a Tamil Trivia Night event, rooted in celebrating the beautiful Tamil culture with like-minded members of our community. On Saturday, September 7, the Melbourne Association of Tamil Students and Casey Tamily Mandrum Youth (CTMY), came together to […]
எங்கள் வீட்டின் பின் வளவில் சிறு புற்தரை ஒன்றுண்டு. அதன் நடுவே பறவைகள் நீர் அருந்தவும் நீராடி மகிழவும் எனச் சிறு நீர்த்தொட்டி ஒன்றை வைத்திருக்கிறோம். வெயில் காலம் வந்துவிட்டால் போதும். அந்தத் தொட்டியைத் தேடிப் பலவிதமான பறவைகள் வருவதுண்டு. பச்சைக் கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகள், புறாக்கள், மக் பைகள், கொக்கடூகள், புலுனிக்குஞ்சுகள், மைனாக்கள், காகங்கள், பலாக்கொட்டைக் குருவிகள் என்று அவற்றின் பெயர்களைச் சரியாக அறிந்துகொள்ளவே எனக்கு வருடக்கணக்கானது. குளிர் […]
-இளவேனில் ஆசியர் குழு- பேரன்புக்குரிய வாசகர்களுக்கு எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துகள். தைமாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதம். நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தழைத்தோங்கும் மாதம். விடுமுறையில் களித்திருந்து, புதுவருடத்திற்கான உறுதிமொழிகளை எடுத்து, இந்தவருடம் இனிய வருடம் என்று நம்பிக்கையோடு தொடங்கும் புத்தூக்கக் காலத்தில் இளவேனிலினின் இருபத்தியேழாவது இதழில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவுஸ்ரேலியத் தமிழ்ச் சமுகத்தின் குரலாக இளவேனில் இம்முறையும் எல்லா வயதினரதும் ஆக்கங்களைச் சுமந்து வெளிவந்திருக்கிறது. ஆக்கங்களை மக்களிடையே […]
அகிலன் ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன். ஆனால், அவனுக்குப் பெரியவராய் வரத்தான் விருப்பம். சிறுவனாக இருப்பது பிடிக்கவில்லை. அவனுக்குத் தன் குடும்பம் முக்கியமாகப் படவில்லை. பள்ளிக்கூடமும் பிடிக்கவில்லை, அவனுக்குத் துடுப்பாட்டம் விளையாட மட்டுந்தான் விருப்பம். ஓர் இரவு, அவன் கட்டிலில் படுத்திருந்தான். தனியாக வேலைக்குப் போய், காசு உழைப்பது எப்படி இருக்கும் என்று சிரித்துச் சிரித்து யோசித்துக்கொண்டிருந்தான். மறு நாள், அகிலன் பள்ளிக்கூட உடுப்பில் நடை பாதையில் நடந்துக் கொண்டிருந்தான். […]
விமானம் நிலத்தை விட்டு takeoff ஆகியது. எனது கண் மூடியது. நான் கண் விழித்தபொழுது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. விமானம் தீப்பற்றி இருந்தது. எனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு விமானத்தில் இருந்து வெளியே ஓடினேன். அடுத்த கணமே விமானம் வெடித்துச் சிதறியது. “இன்னும் கொஞ்ச நாளில் அவர்கள் வருவார்கள்” என்று எனக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு […]
இன்று எனக்கு ஒரு நல்ல சந்தோசமான நாளாக இருக்கப் போகிறது என்று நம்புகிறேன். நான் இன்று ஒரு அழகான பூங்காவிற்கு போகப் போகிறேன். நான் எனது பூனை றுசியை என்னுடன் கொண்டு போகிறேன். “மாலாக் குட்டி…. மாலாக் குட்டி… எழும்புங்கோ. நாங்கள் இப்ப வெளிக்கிட வேணும்” என அம்மா என்னைக் கூப்பிட்டார். அப்போது நான் உடுப்பு மாற்றி, பல் துலக்கி, எல்லாம் செய்த பிறகு நாங்கள் காரில் ஏறிப் போனோம். […]
எங்கள் வீட்டுக்குப் பிள்ளை வருவதில் எனக்கு ஆரம்பத்தில் இம்மியளவிலும் இஷ்டமிருக்கவில்லை. நாய்களில்தான் எனக்கு ஈடுபாடு அதிகம். ஈடுபாடு என்று சொல்வதுகூடத் தவறு. நாய்களின்மீது எனக்குப் பேரபிமானமே உண்டு. ஆனால் என் மனைவி சாயிலா பானுவோ தனக்கு நாய்களைப் பிடிக்காது, இஸ்லாத்தில் நாய்களை வளர்ப்பது ஹராம் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டாள். இத்தனைக்கும் காதலிக்கும்போது நிறைய நாய் காணொளி களை எனக்கு இன்ஸ்டகிராமில் அவள் அனுப் பிக் கொண்டேயிருப்பாள். ஒரு நாய் […]
காலம் என்னும் சக்கரம் சுழன்றபடியே இருக்கின்றது. இம்மாற்றத்திற்கேற்ப இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது யாவரும் அறிந்த ஒன்றே. இம்மாற்றம் மனித வாழ்வையும் விட்டுவைக்கவில்லை. குடிசைகள்கோபுரங்களாகி விட்டன. வீட்டின் வாயிற்படி தாண்டி வெளியே வராமலிருந்த பெண்கள் பல துறைகளிலும் கல்வி கற்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இது பாராட்டப்படக் கூடிய விஷயமாகும். ஆணுக்குப் பெண் அடிமையாக வாழ்ந்த காலம் போய்விட்டது. இன்று ஆணும் பெண் ணும் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். இந்நிலை […]