இதழ் 23

மீண்டும் இன்னொரு முறை

10 நிமிட வாசிப்பு | 38 பார்வைகள்

முழக்கம் பெரு முழக்கம் பேரழிவுக்கான அறிகுறி போர்க்களத்தில் ஆயுதங்கள், ராணுவவீரர்கள் என்று கண்கள் எட்டும் தூரம்வரை படை திரட்டப்பட்டது. யுத்தம் இரு கட்சிகளுக்கிடையே  மூள வீரர்கள் ஒன்றின் பின் ஒன்றாய் மடிய குருதி ஆறாகப் பெருக்கெடுத்து வானத்தையே கடுஞ் சிவப்பாக மாற்றியது. அரசியல் மற்றும் சுயநலக் காரணங்களினால் தொடங்கி அப்பாவி மக்களின் உயிரைப் பணயமாக்கி நியாயத்திற்காகவே என்று காரணம் காட்டி அகிலத்தில் நடக்கும் பேரழிவு இந்தப் போர். அனுபவமே சிறந்த […]

மேலும் பார்க்க

ஊபர் ஈட்ஸ்

10 நிமிட வாசிப்பு | 84 பார்வைகள்
February 24, 2024 | ஜேகே

நேற்று ஊபர் ஈட்ஸ் விநியோகத்துக்கான பொதியை எடுப்பதற்கு இலங்கை உணவகம் ஒன்றுக்குச் செல்லவேண்டியிருந்தது. பொதியில் ஒட்டியிருந்த பெயரைப்பார்த்ததும் அது ஓர் ஈழத்தமிழரின் ஓர்டர் என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். கொத்து ரொட்டியும் அப்பமும் ஓர்டர் பண்ணியிருந்தார்கள். அரைக்கட்டை தூரத்தில் உள்ள கடையின் கொத்து ரொட்டிக்கு ஊபர் ஈட்ஸ் ஓர்டர் பண்ணும் தமிழர்களும் இருப்பார்களா என்ற ஆச்சரியத்துடன் பொதியை வாங்கிக்கொண்டு அந்த வீடு நோக்கிப்புறப்பட்டேன். வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. இரண்டு மாடியில் பிரமாண்டமான […]

மேலும் பார்க்க

மலரின் ஓவியம்

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்
February 24, 2024 | மோஷிகா

மலரின் ஆசிரியர், சிறார்களிடம் அவர்களின் குடும்பத்தாரை வரையச் சொல்லிக் கேட்டிருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை, மலரால் மட்டும் அவளையும் அவளது பெற்றோரையும் வரைய முடியவில்லை. இருப்பினும் மேசையில் குவிந்திருந்த வண்ணங்களைக் கண்டதும் அவளுக்கும் வரைய ஆசையாக இருந்தது. ஆகையால் அவளுக்குப் பிடித்த மிருகமான புலியை வரைந்திருந்தாள். ஆனாலூம் ஏன் அவளால் அம்மா அப்பாவை வரையமுடியவில்லை எனும் கேள்வி அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. இப்படி யோசித்துக்கொண்டே வீடு திரும்பிய மலருக்கு வீட்டில் இருந்து […]

மேலும் பார்க்க

சிந்திக்க

10 நிமிட வாசிப்பு | 52 பார்வைகள்

சிட்னியின் கோடைக் காலத்திலே அதிகாலை கலா வீட்டு விறாந்தையிலே அமர்ந்திருந்தாள். இளமஞ்சள் வெய்யில் இதமான உஷ்ணத்தைப் பரப்பியது. முற்றத்துச் செடிகள் மலர்ந்து அழகு காட்ட, அருகிலிருந்த மல்லிகை மணம் கலாவிற்கு ஒரு வித மயக்கத்தை ஊட்டியது. 76 வயது நிரம்பிய அவள் கடந்த ஒரு வருடமாக மகனுடன் வாழ்ந்து வருகிறாள். கலா எத்தனை வயதைத் தாண்டியும் அவள் தன்னை ஒரு மூதாட்டியாகக் கருதியது கிடையாது. ஆனால் அவள் அதை அங்கீகரிக்கிறாளோ […]

மேலும் பார்க்க

தமிழர் அரசியல்

10 நிமிட வாசிப்பு | 58 பார்வைகள்
February 24, 2024 | ச. சத்தியன்

பத்து வருடங்களுக்கு முன்னர் நான் அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, வேலை தேடி அலைந்து, பல தடைகளின் பின் ஒரு வேலையில் இணைந்தேன். புதிய நாடு, புரியாத மொழி, புதிய பண்பாடு, பழக்கவழக்கங்கள் எனப் பல நடுக்கங்களுடன் முதல் நாள் வேலையில் நுழைந்தேன்.  புன்முறுவலுடன் “Good Morning”, “How are you?” எனச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.  மனதில் பல கற்பனைகளுடன் ஏதோ ஒன்றைச் சாதித்தது போன்ற உணர்வுடன் எனது மேசையில் அமர்ந்து […]

மேலும் பார்க்க

அவுஸ்திரேலியத் தமிழ்ச் செயற்பாடுகளில் ஆழமோ அர்த்தமோ இல்லை

10 நிமிட வாசிப்பு | 46 பார்வைகள்

-எழுத்தாளர் முருகபூபதியுடனான நேர்காணல்- எழுத்தாளர் லெ. முருகபூபதிக்கு அறிமுகம் தேவையில்லை. எழுத்தாளர், இலக்கியச் செயற்பாட்டாளர், மனித நேயப் பணியாளர் எனப் பன்முகங்களைத் தாங்கிநிற்கும் முருகபூபதியை அறியாதவர் அரிது. அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படும் எந்தத் தமிழ்ச் செயற்பாட்டிற்கும் தன் உழைப்பையும் அனுபவத்தையும் ஆற்றலையும் உவந்து கொடுப்பவர் முருகபூபதி. இளவேனில் சஞ்சிகையும் இதற்கு விதிவிலக்கல்ல. கனடாவில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ‘கனடா இலக்கியத் தோட்டம்’ என்ற அமைப்பு  தன்னுடைய வருடாந்த இயல் விருதினை இம்முறை […]

மேலும் பார்க்க

தாய்மையும் தந்தைமையும்

10 நிமிட வாசிப்பு | 53 பார்வைகள்

இந்த உலகம் 2023ல் காலடி எடுத்து வைத்திருந்தாலும் நவீனமயமாதல், உலகமயமாதல் மூலம் பல விடயங்களிலும் எமது சமூகம் பரந்த மனப்பான்மையை வளர்த்திருந்தாலும் நம் மக்கள் தாயையும் தந்தையையும் பார்க்கும் கண்ணோட்டம் இன்னும் பழமை வாய்ந்ததாக இருக்கின்றதோ என்று என் மனதில் ஒரு கேள்வி. ஒரு குழந்தையைப் பராமரிப்பதும் பேணி வளர்ப்பதும் எப்பொழுதும் ஒரு அன்னையின் கடமையாக மட்டுமே பார்க்கப்படுகின்றது. ஏன் அது தந்தைக்குக் கடமையில்லையா? ஒரு தந்தை தனது குழந்தையைப் […]

மேலும் பார்க்க

Collins Street – Knife fight in the prison yard

10 நிமிட வாசிப்பு | 51 பார்வைகள்
February 24, 2024 | Maya Shanmugan

The glass ceiling is often invisible, but often still very present in today’s society. This is the reality of corporate law, where a certain type of lifestyle and personality is expected of everyone. Racism, classism and sexism are often not intentional but casual by products of the unspoken expectation to […]

மேலும் பார்க்க

இடைநடுவில்

10 நிமிட வாசிப்பு | 50 பார்வைகள்

அவள் தன்னை ஒரு  மரமென்று  நினைத்திருந்தாள் சொந்த நிலத்திலிருந்து பெயர்த்தெடுத்து    புதிய நிலத்தில் மீண்டும் வேரூன்றி அந்த நிலத்து விருட்சங்களின் விதானங்களை  அண்ணாந்து பார்த்தபடி  அவற்றின் விசால நிழல்களைத் தாண்டி  சுயமாய் வளரத் துடிக்கும்  ஒரு மரமென்று தன்னை நினைத்திருந்தாள்  “நான் மரமல்ல”  அவள் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் “நான் ஒரு முறிந்த கிளை.”  சொந்த நிலத்தைவிட்டு நெடுந்தொலைவில்  வந்தடையாத அந்தக்  கரையொன்றைத் தேடிக்கொண்டு சமுத்திர அலைகளின் மேல் மிதக்கின்ற மரக்கிளை […]

மேலும் பார்க்க

In Between

10 நிமிட வாசிப்பு | 49 பார்வைகள்

She thought of herself as a treeUprooted from her homeRerooted in a new landLooking upon the native treesTrying to grow out of their shadows“Well, that’s not true!”She tells herself“I am a driftwood.”Floating on the ocean wavesFar away from homeSearching for a shoreShore that never comes She is driftingBetween the shoresBetween […]

மேலும் பார்க்க
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்