கண்ணாடி முன் நின்று சேலை மடிப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொண்டேன். ச்ச…இந்த வயிறு மட்டும் இல்லைனா இன்னும் நல்லா இருக்கும். எரிச்சலாக வந்தது. என்ன பண்ணாலும் இது மட்டும் குறைய மாட்டேங்குது. எப்ப சேலை கட்டினாலும் வயிற்றை கரித்துக்கொட்டுவதையும் சேலை மடிப்புகள் உள்வாங்கி மறைத்துக்கொள்ளும். இப்படி, சேலை கட்டும் ஒரு நாளில் எனக்கே என் வயிற்றின் மீது கரிசனம் உண்டானது. ஏன் எப்பவும் இப்படி திட்டிக்கொண்டே இருக்கேன். […]
என் வாழ்வில், மூன்று பாரிய இடம்பெயர்வுகளும் மறக்க முடியாதவை. இம் மூன்றும் ஒன்றுக்கொன்று, அவைக்கான தூண்டுதல் காரணிகளால் வேறுபட்டிருப்பினும் நோக்கம் ஒன்றாய்த்தான் இருந்தன- விடிவிற்காய்! இலங்கையில் நடந்த இரு இடம்பெயர்வுகளிலும் கூடவே அம்மா,அப்பா, தங்கை, அத்தான், மச்சாள் என பலரும் இருந்திருந்தனர். நடைபயணங்களில் பிஞ்சுக் கால்கள் வலித்த பொழுதுகளில் நடை வேகம் குறைந்தது. கூட்டத்தைப் பிரிந்து நடந்த பொழுதுகளில் அருகே ஒரு நாய்க்குட்டி பயணத் துணையானது. இம் மூன்றாவது இடம்பெயர்வுக்கு […]
“என்னப்பா உங்கிட பிரச்சனை”? “ஐயோ இந்தக் கேள்விதானுங்க எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்” என்னால முடியாது. இனியும் நான் இங்க இருந்தால் என்னை ஏதாவது ஒரு மன நோயாளிகள் வைத்தியசாலையில்தான் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள் இவர்கள். இது நடக்கும். இவ்வளவு நாளும் நான் வேலை,வேலை என்று ஓடி வேலையும் வீடும் என்றும் இருந்தனான். நாலு மாதத்துக்கு முன்தான் பென்சன் எடுத்து வீட்டோட நிம்மதியா பிள்ளையளோட இருக்கலாம் என்று எவ்வளவோ கனவுகளோடும் […]
பதினொரு மாதங்களையும் சில நாட்களையும் ரிலே ஓட்டத்தில் ஒடிக் களைத்த 2015 தன் கையிலிருந்த சிறிய கம்பை அடுத்து ஓடக் காத்திருக்கும் இரண்டாயிரத்து பதினாறிடம் ஒப்படைக்கக் காத்திருக்கும் சில மிச்ச சொச்ச நாட்பொழுதுகள். இன்னும் சில நாட்களுக்குப் பிராஜெக்ட் சைட் ஆபிஸுக்குப் போய் வரவேண்டும். இரண்டு மணி நேரப் பயணம். Hougang MRT யிலிருந்து Circle Line ஏறி Serangoon வந்து Green Line மாறி Bouna Vista MRT […]
இன்றைய காலத்தில் குடும்ப வன்முறை நமது உலகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இச்சூழலில் நமது தமிழ் சமூகத்தில் நடக்கும் குடும்ப வன்முறையையும் நாம் உற்றுநோக்க வேண்டும். குடும்ப வன்முறை வெவ்வேறு கோணங்களிலும் வகைகளிலும் காணப்படுகின்றன. அவை அச்சுறுத்தும் நடத்தை, கட்டுப்படுத்துதல், வற்புறுத்துதல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்துதல். ஒவ்வொரு தமிழ் மகன் அல்லது மகள் குடும்ப வன்முறையால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. இக்குடும்ப வன்முறை நமது […]
பரபரப்பான நகரங்களின் மத்தியில், அறிவிப்புகளின் இடைவிடாத சலசலப்பும், இணைப்புகளின் கவர்ச்சிக்கு மத்தியில், ஒரு அமைதியான நெருக்கடி உள்ளது: தனிமையின் தொற்றுநோயில் இளைஞர்கள் முடங்கியிருக்கிறார்கள். வானளாவிய கட்டிடங்கள் விண்ணைத் தொடும் அதே வேளையில், டிஜிட்டல் தளங்கள் முடிவற்ற இணைப்புகளை உறுதியளிக்கின்றன. பல இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். ஆனால் இந்த கடுமையான முரண்பாட்டை தூண்டுவது எது? ஒரு புலனாய்வுப் பயணத்தைத் தொடங்குவோம். Alone vs Lonely: A nuanced difference ஒரு இளம் […]
எனது இசைப்பயணம் எப்படி ஆரம்பித்தது என்றால், மற்ற சிறுவர்களைப்போல் நான் என்னுடைய சகோதரருடன் சிறுவயதில், எங்களுடைய அம்மா, அப்பா முன் ஆடிப் பாடிக்கொண்டு இருப்பதை அவர்கள் இரசித்தார்கள். அவர்களின் இசை ஆர்வத்தால், நாம் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சில இசைக்கருவிகளைப் பயில்வதற்கு வழி செய்தார்கள். அதைத் தொடர்ந்து, அப்பாவினதும் தனிப்பட்ட இசை ஆசிரியர்கள் உதவியுடனும் வெவ்வேறு இசைக்கருவிகளைக் கற்கக்கூடியதாக இருந்தது. எனக்கு இசைக்கருவியுடன், பாடுவதில் ஆர்வம் இருந்தபடியால், பல பாடல்களைப் […]
வருடம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது, COVID-19 உலகத்தைத் தாக்குவதற்கு முன், சென்னை மழை போல நியூ யோர்க் நகரத்தில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில், இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு, கதிரவன் எனும் ஓவியன் தனது கண்காட்சித் திறப்பு விழாவிற்கான கடைசி ஓவியத்தை வரைவதற்குத் தனது மூளையைக் கிண்டிக்கொண்டிருந்தார். தனது மேசையில் நிறையக் காகிதங்கள் பரவிக்கிடந்தன. அதற்குப் பக்கத்தில் அவரது மனைவி எப்போதோ வைத்த தேத்தணி ஆறிப் பச்சைத் தண்ணீர் போல் மாறிவிட்டது. ஒரு கை […]
Mental health issues in the South Asian community are often approached from a position of fear, enabled by various factors including stigma and shame. Mental health issues carry a sense of shame, resulting in limited conversation about the issues, which further isolates the individual and limits access to supports. This […]
இரட்டைத் தரம் (double Standard) என்பது எங்களுக்குள் ஊடுருவிப்போன ஒரு விடயம். வாழ்வின் பல கட்டங்களில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும். ஒரு குழந்தை பிறந்து இரண்டு மாசத்தில் உடம்பு பிரட்டினால் பூரிப்பு. அதுவே கொஞ்சம் பிந்தினால் ஏதோ இழந்துவிட்டதுபோல் உணர்வு. ஒரு உடம்பு பிரட்டலில் ஆரம்பிப்பது அப்படியே தொடரும். அவசரமாக தவழ வேண்டும். தவழ்ந்தவுடன் நடக்க வேண்டும். இரண்டு மாதம் முன்னதாக பல் முளைக்க வேணும். இப்படி எல்லாத்திலயும் பிள்ளை வயசுக்கு […]